பொது செய்தி

தமிழ்நாடு

புரட்டாசி கடைசி சனியில் திரளானோர் தரிசனம்

Added : அக் 13, 2019
Advertisement

சேலம்: புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நேற்று, சேலம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. அதில், திரளானோர், நீண்ட வரிசையில் நின்று, தரிசனம் செய்தனர்.
சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவில் நடை, காலை, 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. மூலவர் அழகிரிநாதருக்கு, சுப்ரபாதம், தோமாலை சேவையை தொடர்ந்து, சாத்துமறை நடந்தது. பின், சிறப்பு அபி?ஷகம் செய்து, தங்கக்கவச அலங்காரம் சகிதமாக, திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் காட்சியளித்தார். திரளான பக்தர்கள், குடும்பத்துடன் வந்து, நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அனைவருக்கும், துளசி, லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. உற்சவர் அழகிரி நாதர், ராஜ அலங்காரத்தில், வீதியுலா சென்று, குகை பகுதியை அடைந்தார். அங்கு, விசேஷ அபி ?ஷகம் செய்து, பக்தர்கள் வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, கருட வாகனத்தில் உலா வந்து, இரவு, 10:00 மணிக்கு, கோவிலை வந்தடைந்தார்.

கன்னங்குறிச்சி, சின்ன திருப்பதி, வெங்கடேச பெருமாள் கோவிலில், புஷ்ப அலங்காரத்தில், மூலவர் காட்சியளித்தார். மாலை, ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக, உற்சவர், சர்வ அலங்காரத்தில், தேரில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொன்னம்மாபேட்டை, ஆஞ்சநேயர் கோவிலில், வண்ண மலர்களால், 'புஷ்பங்கி' சேவையில், அனுமன் காட்சியளித்தார். இரவு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள், சிறப்பு அலங்காரத்தில், சப்பரத்தில் எழுந்தருளச்செய்து, திருவீதி உலா அழைத்து வந்தனர். செவ்வாய்ப்பேட்டை, வெங்கடேச பெருமாள் கோவிலில், மூலவர் தங்க கவசத்திலும், ஜாகீர்அம்மாபாளையம், ஆஞ்சநேயர், செந்தூர வெண்ணெய் காப்பு அலங்காரத்திலும், காருவள்ளி, சின்ன திருப்பதி, வெங்கடரமணர், வெள்ளி கவசத்திலும் காட்சியளித்தனர். கோரிமேடு, வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா வந்தார். வாழப்பாடி, அக்ர ஹாரம், சென்றாய பெருமாள் கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவியுடன், மூலவர் பெருமாள், ரத்தின கற்கள் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவமூர்த்திகள், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வந்தனர். முன்னதாக, சுவாமி திருக்கல்யாண வைபவம், ஊஞ்சல் சேவை நடந்தது. அருநூற்றுமலை, பெலாப்பாடி மலை உச்சியிலுள்ள வரதராஜபெருமாள், கோதுமலை கோதண்டராமர் மலைக்கோவில்களில், காளை கன்றுக்குட்டிகளை, பக்தர்கள், சுவாமிக்கு நேர்த்திக்கடனாக வழங்கினர். இடைப்பாடி, மூக்கரை பெருமாள், சூரியமலை, வெள்ளூற்று பெருமாள் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களில், 'கோவிந்தா' கோஷம் முழங்க, பக்தர்கள் வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X