பொது செய்தி

தமிழ்நாடு

வி.ஐ.டி., பல்கலையில் அறிவுசார் திருவிழா

Added : அக் 13, 2019
Advertisement

காட்பாடி: வேலூரில் நடந்து வரும் 'அறிவுசார் திருவிழா'வில், மலர் வெளியிடப்பட்டது. வேலூர், வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில், 'கிராவிடாஸ்' என்ற 'அறிவுசார் திருவிழா' மூன்று நாட்கள் நடக்கிறது. விழா மலர் வெளியிட்டு விழாவில், வேந்தர் விசுவநாதன் மலரை வெளியிட்டார். பெங்களூரு குளோபல் மைய உதவி துணைத்தலைவர் பாபுராம், ஆட்டோ டெக்ஸ் கல்வி நிறுவன தலைமை இயக்குனர் திபன்கர் பட்டாச்சாரியா உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில், மழைநீர் சேகரிப்பு, கண் பரிசோதனைக்கான புதிய முறைகளை கண்டுபிடித்த மாணவர் குழுவினருக்கு, தலா ஒரு லட்சம் ரொக்கப்பரிசை வேந்தர் விசுவநாதன் வழங்கினார். தொடர்ந்து, கிராவிடாஸ் ரோபோடிக்ஸ் நடந்தது. இதில், ஒன்பது நாடுகள், 300 பல்கலைக் கழகங்கள், 100 கல்லூரிகளை சேர்ந்த, 15 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X