பொது செய்தி

தமிழ்நாடு

கி.பி., 12ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு

Added : அக் 13, 2019
Share
Advertisement

திருப்பத்தூர்: அம்பலூர் பாலாற்றில், கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் பிரபு கூறியதாவது: வாணியம்பாடி அடுத்த, அம்பலூர் அருகே, தேங்காய் தோப்பு வட்டத்தில் பாலாற்றங்கரையில் பாதி உடைந்த நிலையில் ஒரு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. இயந்திரத்தில், இப்பகுதியில் தூர் வாரிய போது, இந்த நடுகல் இரண்டாக உடைந்துள்ளது. மண்ணில் புதைந்துள்ள இந்த நடுகல்லை ஆய்வு செய்ததில், கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால சோழர்கள் ஆட்சியை சேர்ந்தது என தெரியவந்தது. நடுகல்லில், ஒரு வீரனின் வலது கையில் போர்வாள் உள்ளது. இடது கையில் தற்காப்பு கேடயம் உள்ளது. போரில் எதிரி விட்ட அம்பு வீரனின் மார்பில் பாய்ந்து இறந்து கிடக்கிறார். கல்லின் இடது பக்க மேல்புறத்தில், இரு பெண்கள் வீரனை தேவலோகத்திற்கு அழைத்து செல்வது போல நடுகல்லில் உள்ளது. போரில் உயிர் விட்ட வீரனுக்காக நடுகல் எடுக்கப்பட்டது. நடுகல்லின் உடைந்த நிலையில் மேற்புறம் மட்டும் கிடைத்துள்ளது. அதை இப்பகுதி மக்கள், சலவை கல்லாக பயன்படுத்துகின்றனர். கல்லின் கீழ்புறம் காணவில்லை. இது போன்ற நடுகல் இப்பகுதியில் நிறைய உள்ளது. இப்பகுதியில் நீண்ட காலமாக போர்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. தொல்பொருள் ஆய்வுத்துறையினர், இது போன்ற நடுகற்களை கண்டுபிடித்தால், ஏராளமான மன்னர்கள் வரலாறுகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வுக்கூட மாணவர் தரணிதரன் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X