சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரியில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி

Added : அக் 13, 2019
Share
Advertisement

வேலூர்: வேலூரில், லாரியில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலியானார். வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 59. மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர், வேலூர் தோட்டப் பாளையத்தில் உள்ள சிவில் சப்ளை குடோனிலிருந்து, அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு, சத்துவாச்சாரியில் உள்ள ரேஷன் கடைகளில் வினியோகம் செய்ய லாரியின் பின்னால், மூட்டைகளின் மேல் அமர்ந்து சென்றார். வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே வந்த போது, லாரியை ஓட்டிச்சென்ற வேலூரை சேர்ந்த வடிவேலு, 45, திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில், நிலைதடுமாறி கீழே சாலையில் விழுந்த சுப்பிரமணி, சம்பவ இடத்திலேயே பலியானார். வேலூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X