சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி சாவு

Added : அக் 13, 2019
Share
Advertisement

சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணத்தை சேர்ந்த குமார், 57 கூலி தொழிலாளி. இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர், கடந்த, 10ல் சொந்த வேலையாக சேத்துப்பட்டு சென்று, மீண்டும் உறவினர் ஆட்டோவில் நெடுங்குணம் சென்றார். அப்போது, சேத்துப்பட்டு - வந்தவாசி சாலையில், நெடுங்குணம் அருகே சென்றபோது ஆட்டோ நிலை தடுமாறி சாலையில் குப்புற கவிழ்ந்தது. இதில், குமார் படுகாயமடைந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். சேத்துப்பட்டு போலீசார் விசாரித்து, ஆட்டோ டிரைவர் நெடுங்குணத்தை சேர்ந்த கோபி, 32, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X