சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியை கண்டித்ததால் தப்பியோட சுவரேறி குதித்த மாணவன் மயக்கம்

Added : அக் 13, 2019
Advertisement

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே, ஆசிரியை கண்டித்ததால், தப்பியோட சுவர் ஏறி குதித்தபோது, மாணவர் மயக்கமடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த பழம்பேட்டையை சேர்ந்த, 16 வயது மாணவர், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று காலை நடந்த சிறப்பு வகுப்பிற்கு அவர் வந்தார். அப்போது, வகுப்பு ஆசிரியை சரிதா, 37, அந்த மாணவரை அழைத்து, உன் மீது நிறைய புகார்கள் வருகின்றன, ஒழுங்காக நடந்து கொள் என கண்டித்துள்ளார். பின்னர், காலை பிரார்த்தனை கூட்டத்துக்கு சென்றார். அப்போது, அந்த மாணவர், வகுப்பறையை ஒட்டிய வராண்டா சுவரில் திடீரென ஏறிக்குதித்து தப்பியோட முயன்றார். அப்போது அவர் மயக்கமடைந்து விழுந்ததால், சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலின்படி மாணவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். சேத்துப்பட்டு போலீசார், மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சமாதானம் செய்து, முற்றுகையை கைவிட செய்தனர். மாணவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X