பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு

Added : அக் 13, 2019
Advertisement

பெரணமல்லூர்: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் அரசு தொடக்கபள்ளியில், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் தலைமை வகித்தார். செய்யாறு சுகாதாரப்பணிகள் உதவி இயக்குனர் கோவிந்தன் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
உதவி இயக்குனர் கோவிந்தன் நிகழ்ச்சியில் பேசியதாவது: தற்போது, பருவநிலை மாறும்போது கொசுக்கள் மூலம் காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உங்கள் பெற்றோரிடம் வீடுகளை சுற்றி சுத்தமாக வைக்க அறிவுறுத்த வேண்டும். வீட்டில் தேங்காய் சிரட்டை, டயர், உரல், உள்ளிட்ட பொருட்களில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் கேன்கள், பாத்திரங்களில் வைக்கப்படும் தண்ணீர் மூடியே இருக்க வேண்டும் என, பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதை நாம் கடைப்பிடித்தால் கொசுக்கள் மூலம் நமக்கு எந்த காய்ச்சலும் பரவாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X