பொது செய்தி

தமிழ்நாடு

மா.திறனாளி நலனுக்கு பணிபுரிந்தோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Added : அக் 13, 2019
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள், விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வரும் டிச., 3ல் நடக்க உள்ள மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில், தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட உள்ளன. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவர் ஆகியோருக்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. அதேபோல், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியருக்கும் (செவித்திறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்) வழங்கப்பட உள்ளது. இந்த பிரிவுகளில் இருந்து விண்ணப்பிக்கும் நபர்கள், scda.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ள, விருதுக்கான விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வரும், 15க்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X