பொது செய்தி

தமிழ்நாடு

வெம்பாக்கம் தாலுகாவில் 50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி

Added : அக் 13, 2019
Share
Advertisement

திருவண்ணாமலை: வெம்பாக்கம் தாலுகாவில் வேளாண் துறை சார்பில், 50ஆயிரம் பனை விதை நடும் பணி நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகாவை சேர்ந்த வடமணப்பாக்கம், குத்தனூர், திருப்பனமூர், பணமுகை, பிரம்மதேசம், ஏழாச்சேரி, ஆகிய கிராமங்களில், வேளாண் துறை சார்பில், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை திட்டத்தில் பனை விதை நடும் பணி நேற்று தொடங்கியது. நீர்நிலைகள், கரைகள், விவசாய நில வரப்புகளில் பனை விதை நடப்படுகிறது. வெம்பாக்கம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் தலைமையில், நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X