பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் சேகரிப்பு, குப்பை உரமாக்கல்: திருச்சி மாநகராட்சியில் பரிசுத் திட்டம்

Added : அக் 13, 2019
Advertisement

திருச்சி: திருச்சி மாநகராட்சிப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் குப்பையை வீடுகளிலேயே உரமாக்கும் திட்டத்தை செயல்படுத்திய பத்து பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.
திருச்சி மாநகராட்சிப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில், வீடுகளில் சரியான முறையில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் வீடுகளில் சேகரமாகும் மட்கும் குப்பையை வீடுகளிலேயே உரமாக்கும் திட்டத்தை செயல்படுத்திய பொதுமக்கள், மாநகராட்சி வாட்ஸ் ஆப் எண்ணில் புகைப்படத்துடன் பதிவு செய்தனர். உதவிஆணையர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று பார்வையிட்டு, சரியான முறையில் செயல்பட்டவர்களை தேர்வு செய்தனர். திருச்சி, கலையரங்கம் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், வீடுகளில் சரியான முறையில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் வீடுகளிலேயே உரமாக்கும் திட்டத்தை செயல்படுத்திய நாகஅர்ஜுனன், பானூஸ், அப்துல் ஹமிது, ஸ்ரீரஞ்சன், ஜோயல் வில்சன், ஸ்ரீராம், மோனிகா, பிரவீன், குணசுந்தரி, நபிஷா ஆகியோருக்கு, 5,500 ரூபாய் மதிப்புள்ள சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பரிசு வழங்கினார். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சரியான முறையில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தும் ஐந்து மாணவர்களை தேர்வு செய்து, வீடுகளில் சேகரமாகும் மக்கும் குப்பையை உரமாக்கும் அமைப்பை ஏற்படுத்தும் ஐந்து மாணவர்களை தேர்வு செய்தும், 5,500 ரூபாய் மதிப்புள்ள சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளது என, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X