பொது செய்தி

தமிழ்நாடு

புரட்டாசி 4வது சனி; கோவில்களில் குவிந்த பக்தர்கள்

Added : அக் 13, 2019
Advertisement

ஈரோடு: புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை ஒட்டி, பெருமாள் கோவில்களில் நடந்த, சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புரட்டாசி மாத, நான்காவது சனிக்கிழமை தினமான நேற்று, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை நடை திறந்து, திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. மூலவர், ஆதிசேஷன் மீது, அனந்த சயன கோலத்திலும், உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கல்யாண மண்டபத்தில், லட்சுமி நாராயணராக தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளினார். பல்வேறு அமைப்பினரின் சார்பில், நாராயண பஜன் நிகழ்ச்சி நடந்தது.


* புன்செய்புளியம்பட்டி, கோவில்புதூர், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், மகா அபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது. கரிவரதராஜ பெருமாள் தங்க காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தாசர்களுக்கு, அரிசி படி வழங்கி, பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். விவசாயிகள், தங்கள் விளை நிலங்களில் விளைந்த தக்காளி, கத்தரிக்காய், புளி உள்ளிட்ட காய்கறிகளை படைத்தனர். கீழ்முடுதுறை திம்மராயப்பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்த ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி, வழிபாடு நடந்தது. சர்ப்ப வாகனத்தில், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பெருமாள் எழுந்தருளினார்.


* பவானி அருகே, பெருமாள்மலையில், மங்களகிரி பெருமாள் கோவிலில், ?.? கி.மீ., மலையேறி, பெருமாளை வழிபட்டனர். ஈரோடு, பவானி, கவுந்தப்பாடி, சித்தோடு, கோபி, அம்மாபேட்டை, அந்தியூர், குமாரபாளையம், பள்ளிபாளையம், பெருந்துறை பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மலையில் கூட்டம் அலைமோதியது.


* அந்தியூரில், பேட்டை பெருமாள், கரிவரதராஜ பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூஜை நடந்தது.

* சென்னிமலை, மேலப்பாளையம், ஆதிநாராயண பெருமாள் கோவிலில், அதிகாலை நடை திறந்து, அலர்மேலு மங்கை, நாச்சியார் மங்கை சமேத ஆதிநாராயண பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, கோவிலில் இருந்து சுவாமி ஊர்வலம் புறப்பட்டு, மேலப்பாளையத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதேபோல், சென்னிமலை-காங்கேயம் சாலையில் உள்ள, பழமை வாய்ந்த ஏகாந்த வெங்கடேச பெருமாள் கோவில், வடுகபாளையம் அணியரங்க பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X