பொது செய்தி

தமிழ்நாடு

அணிவகுத்த அரியவகை தபால் தலைகள்: ஆச்சர்யத்தில் மூழ்கிய மாணவ 'கண்கள்'

Added : அக் 13, 2019
Advertisement

ஈரோடு: அஞ்சல் துறை வார விழாவை முன்னிட்டு, ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில், தபால் தலை கண்காட்சி நேற்று நடந்தது.
தபால் தலை சேகரிப்பாளர் சம்பத்குமாரின் சேகரிப்பு தபால் தலை, கார்டு போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டன. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். உதவி அஞ்சல் அதிகாரிகள் சஞ்சீவி, சிவசுப்பிரமணியன், ராகவன் விளக்கமளித்தனர்.இதுகுறித்து முதுநிலை அஞ்சல் அதிகாரி சாய்ராம் கூறியதாவது: கண்காட்சியில், 1989ல் வெளியான தபால் அட்டை, 1947ல் வெளியான ஸ்டாம்ப், இந்தியா உட்பட பல்வேறு நாட்டு தபால் தலைகள் உள்ளன. இதுபோன்ற கண்காட்சியால் மாணவ, மாணவியருக்கு தபால்தலை, தபால் அட்டை மூலம் நடந்த தொடர்புகள், உலக தலைவர்கள், கலாசாரம், தலைவர்களின் தபால் தலையுடன், அவர்கள் குறித்து வரலாறு, தகவல் போன்றவை அறியலாம். தபால் தலை சேகரிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும். பல நாட்டில் உள்ளவர்களுடன், தபால் தலை சேகரிப்பு அமைப்பில் இணைந்து, தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X