பொது செய்தி

தமிழ்நாடு

வணிக அஞ்சல் பிரிவு துவக்கம்: இரவு 9:30 வரை தபால் பெறப்படும்

Added : அக் 13, 2019
Advertisement

ஈரோடு: ஈரோடு, காந்திஜி சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில், நாளை 'வணிக அஞ்சல் பிரிவு' துவங்கப்படுகிறது. இதையடுத்து இனி, இரவு, 9:30 மணி வரை அனைத்து தபால்களும் பெறப்படும்.
இதுகுறித்து முதுநிலை அஞ்சல் அதிகாரி சாய்ராம் கூறியதாவது: நாளை முதல் தனி கவுன்டரில், 'வணிக அஞ்சல் பிரிவு' துவங்கி, மதியம், 2:00 மணி முதல் இரவு, 9:30 மணி வரை, அனைத்து வகையான பதிவு தபால், ஸ்பீடு போஸ்ட், பார்சல், உள்நாட்டு, வெளிநாட்டு பார்சல்கள் பெறப்படும். வெளிநாடுகளுக்கு அனுப்பும் பார்சல்களுக்கு பேக்கிங் வசதி உள்ளது. கூடுதல் கட்டணம் ஏதுமில்லை. தினமும் தபால், பார்சல் அனுப்பும் வாடிக்கையாளர்களின் கடை மற்றும் இருப்பிடங்களுக்கு வந்து, தபால், பார்சல்களை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாதம் ஒரு முறை தொகை பெறப்படும். அதிக தபால், பார்சல் அனுப்பினால், தள்ளுபடி டிஸ்கவுண்ட் வழங்கப்படும். கூடுதல் விபரமறிய, 0424 2259111, 2251408 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X