பொது செய்தி

தமிழ்நாடு

வெண்டிபாளையத்தில் 'சப்-வே' பணி தீவிரம்

Added : அக் 13, 2019
Advertisement

ஈரோடு: ரயில்வே சார்பில் வெண்டிபாளையத்தில், 'சப்-வே' அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. ஆளில்லாத ரயில்வே கேட்களை, ரயில்வே நிர்வாகம் அகற்றி வருகிறது. இதன்படி ஈரோட்டை அடுத்த வெண்டிபாளையத்தில், இரண்டு ரயில்வே கேட்கள் உள்ளன. இதன் வழியாக, சோலார் பகுதிக்கு, இலகுரக வாகனங்கள், டூ-வீலர்கள் அதிகம் செல்கின்றன. இரு கேட்களிலும் ரயில்வே ஊழியர்கள், பணி செய்கின்றனர். இந்நிலையில், வெண்டி பாளையத்தில் 'சப்-வே' அமைக்கும் பணி தொடங்கி, நடந்து வருகிறது. வாகனங்கள் கீழ்புறம், பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம், ??ல் தொடங்கிய பணி, மூன்று மாதங்களில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சேலத்தில் இருந்து ஈரோடு வரும் தடத்தில், 'சப்-வே' அமைக்கப்படுகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகளை அடுக்கி, ராட்சத இயந்திரங்கள் மூலம், உடனடி ரெடிமேட் பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ரயில்வே கேட்டிலும் 'சப்-வே' பணி தனித்தனியே நடக்கும். இதற்காக ரயில் சேவை நிறுத்தப்படவில்லை. இந்த பகுதியில், ரயில்கள் மிக மெதுவாக இயக்கப்படுவதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X