சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது: 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Added : அக் 13, 2019
Share
Advertisement

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரியால், 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் அடுத்த அபாயகரமான, 27 கொண்டை ஊசி வளைவு கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்தபாதை வழியாக தமிழகம்-கர்நாடகா மாநிலத்திற்கும் இடையே, 24 மணி நேரமும் வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது. நேற்று காலை, 5:00 மணியளவில் ஈரோட்டில் இருந்து மைசூருக்கு உரம் ஏற்றிய லாரி ஒன்று திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்து. ஒன்பதாவது கொண்டைஊசி வளைவில் திரும்பியபோது, பழுதாகி நின்றது. இதனால், பிற வாகனங்கள் செல்ல முடியாமல் மலைப்பகுதிகளின் இருபுறமும் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பண்ணாரியில் இருந்து, மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியை பழுது நீக்கிய பின்னர், காலை, 10:00 மணியளவில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. லாரி பழுதாகி நின்றதால் மலைப்பாதையில், 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X