சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதியதில் திருப்பூர் விவசாயி பலி

Added : அக் 13, 2019
Share
Advertisement

பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே, டூவீலர் மீது டாடா ஏஸ் வாகனம் மோதியதில், விவசாயி பலியானார். திருப்பூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே, தொட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம், 72, விவசாயி. புன்செய்புளியம்பட்டி வந்த இவர், தொட்டிபாளையத்துக்கு டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., சூப்பர் மொபட்டில், நேற்று மதியம், 2:00 மணியளவில் சென்றார். கோவை தேசிய நெடுஞ்சாலையில், டாணாபுதூர் அருகே, புளியம்பட்டி நோக்கி வந்த, டாடா ஏஸ் வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சோமசுந்தரம், தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்தில் பலியானார். அதேசமயம் மோதிய வேகத்தில், டாடா ஏஸ் வாகனம், சாலையோர கம்பத்தில் மோதி பக்கவாட்டில் கவிழ்ந்தது. டிரைவர் தியாகராஜன், 35, லேசான காயத்துடன் தப்பினார். புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X