பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : அக் 13, 2019
Advertisement

சுகாதார வளாக கட்டடம் வீண்: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஜம்மணஹள்ளி பஞ்.,ல், 12 ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த, 2011-12ல், புதுப்பிக்கப்பட்டது. சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க, பஞ்., நிர்வாகம் ஆர்வம் காட்டாததால், தற்போது, பயன்பாடின்றி உள்ளது. இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தும் நிலை உள்ளது. சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி: தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை திரு.வி.க.,நகரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, ஆறு ஆண்டுகளுக்கு முன், நகராட்சி நிர்வாகம் சார்பில், சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதன் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால், இதில் தண்ணீர் வருவதில்லை. இதை சீரமைக்க, நகராட்சிக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும், நடவடிக்கை இல்லை.

பயன்பாடின்றி சமுதாய கூடம்: தர்மபுரி அடுத்த நாயக்கனஹள்ளி பஞ்., சோலைக்கொட்டாயில் கடந்த, நான்காண்டுகளுக்கு முன் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இப்பகுதி மற்றும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் இங்கு, சுபகாரியங்களை குறைந்த வாடகையில் நடத்தி வந்தனர். இக்கூடத்தை தொடர்ந்து பராமரிக்க பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இக்கூடம் தற்போது பயன்படுத்த முடியாமல் காட்சி பொருளாக உள்ளதாக, மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X