பொது செய்தி

தமிழ்நாடு

15ல் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி

Added : அக் 13, 2019
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரியில், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நாளை மறுதினம் நடக்கிறது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி) மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில், மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்தல், திறன்களை வெளிக்கொண்டு வருதல், எதிர்கால விஞ்ஞானிகளை உருவாக்குதல் என்பதற்காக, அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, 47வது ஜவஹர்லால் நேரு அறிவியல், கணிதம், சுற்றுப்புற கண்காட்சி தமிழகம் முழுவதும், அக்., 14 மற்றும், 15ல் நடத்தவும், அக்., 15ல் பள்ளிகளில், அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடவும் உத்தரவிடப்பட்டது. மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை மறுதினம் நடக்கிறது. இதில், உணவு, நம்மை சுற்றி வாழும் உயிரினங்கள், இயக்கம், இயக்க கோட்பாடுகள், சுற்றுப்புறசூழல் மற்றும் தூய்மை, இயற்கை வளம், கணிதம், ஓவியம், தேவையில்லாத பொருட்களால் கலை பொருட்கள் செய்தல் ஆகியவை தொடர்பாக படைப்புகள் வைக்கப்பட உள்ளன. ஆறு முதல், எட்டு, ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும், பிளஸ் 2 என நான்கு பிரிவுகளாக நடத்தப்படும் கண்காட்சியில், அரசு, மற்றும் தனியார் பள்ளிகள் என, 500 பள்ளிகளில் இருந்து, 600க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சி படுத்தப்படுகிறது. சிறந்த படைப்புகளுக்கு, முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும். முதலிடம் பெறுபவர்கள் மட்டும், கரூரில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்பார்கள் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X