பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் பழகுனர் பயிற்சி இடங்களை நிரப்ப அழைப்பு

Added : அக் 13, 2019
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தனியார் தொழில் நிறுவனங்களில், 5,000க்கும் மேற்பட்ட தொழில் பழகுனர் பயிற்சி இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
ஓசூர் அரசு ஐ.டி.ஐ., உதவி இயக்குனர் சுகுமார் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஓசூரில் உள்ள பல்வேறு முன்னணி தனியார் தொழில் நிறுவனங்களில், 5,000க்கும் மேற்பட்ட தொழில் பழகுனர் பயிற்சி இடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்று தொழில் பழகுனர் பயிற்சி பெறாதவர்களும் மற்றும், 2019 ஜூலையில் அகில இந்திய தொழில் தேர்வு எழுதி காத்திருப்பவர்களும் ஓசூர் அரசினர் தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யலாம். தொழில் பழகுனர் பயிற்சி பெறும்போது, 7,500 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை தொழில் பிரிவுக்கு ஏற்றவாறு நிறுவனத்தார் உதவித்தொகை வழங்குவர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X