அரசு மகளிர் பள்ளியில் பெண் குழந்தைகள் தினம் கடைப்பிடிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மகளிர் பள்ளியில் பெண் குழந்தைகள் தினம் கடைப்பிடிப்பு

Added : அக் 13, 2019
Share

ஓசூர்: ஓசூர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆராதனா சமூக சேவை மற்றும் திறன் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில், பெண் குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தலைமையாசிரியர் லதா தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., ஆசிரியை சாய் லட்சுமி வரவேற்றார். விழாவில், டாக்டர் ரஜினி கலையரசன் பேசுகையில், ''பெற்றோரை இழந்து, உறவினர்கள் கைவிட்ட நிலையிலும், ஆசிரியர்கள் செய்த உதவியாலும், கூலி வேலை செய்தும், மனம் உடைந்து போகாமல், நன்றாக படித்து டாக்டராக முடிந்தது,'' என்றார். ஆராதனா நிறுவனர் ராதா, பெண் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சைல்டு லைன்-1098 குறித்து பேசினார். முன்னதாக பேச்சு போட்டி, ஓவிய போட்டி, கவிதை போட்டி மற்றும் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. என்.எஸ்.எஸ்., மாணவி ரோகினி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X