பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் காந்தி புகைப்பட கண்காட்சி

Added : அக் 13, 2019
Share
Advertisement

ஓசூர்: ஓசூர் அருகே உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளியில், காந்தி புகைப்பட கண்காட்சி நடந்தது. ஓசூர் அருகே உள்ள, சமத்துவபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், காந்தியின், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, புகைப்பட கண்காட்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் கோபாலப்பா வரவேற்றார். ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் பொன்முடி கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில், காந்தியின் நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்று புகைப்படங்கள், அஞ்சல் தலைகள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், புத்தகங்கள், மாணவர்கள் வரைந்த, 50க்கும் மேற்பட்ட ஓவியங்கள், முக்கிய குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. அரசு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். காந்தியின் கொள்கையை பின்பற்றுவோம் என, கண்காட்சியை பார்வையிட்ட மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொன்மை மன்ற பொறுப்பாளர் சீனிவாசன், வரலாற்று மன்ற பொறுப்பாளர் ராஜாராம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாராயணன், ஓசூர் மாவட்ட கல்வி உதவியாளர் பிரபாவதி, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் முனிராஜ், சந்திராரெட்டி, புத்திலிதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X