பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வரின் சிறப்பு குறைதீர் நாளில் பெறப்பட்ட 13,474 மனுக்கள் ஏற்பு

Added : அக் 13, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில், 13 ஆயிரத்து, 474 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் ஏற்பு மற்றும் நீக்கல் குறித்து, கங்கலேரி, ஆலபட்டி, வெலகலஅள்ளி பஞ்.,களில் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, கலெக்டர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் உத்தரவின்படி, ஏழை எளிய மற்றும் அனைத்து தரப்பு மக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து தாலுகாக்களிலும், 527 சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பசுமை வீடுகள், சாலை வசதி, குடிநீர் வசதி, கடன் வசதி வேண்டி, மொத்தம் 30 ஆயிரத்து, 175 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மனுதாரர்களை நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில்,13 ஆயிரத்து, 474 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 16 ஆயிரத்து, 683 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதில், நிராகரிக்கப்பட்ட மனுக்கள் மீதான உண்மை தன்மை குறித்து, சம்பந்தபட்டவர்களிடம் எடுத்து கூறப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து கலெக்டர், வெலகலஅள்ளி பஞ்.,பாசிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், சத்துணவு மையத்தை பார்வையிட்டு குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, கிருஷ்ணகிரி தாசில்தார் ஜெய்சங்கர் மற்றும் வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X