பொது செய்தி

தமிழ்நாடு

மாணவி கோரிக்கையை ஏற்று கழிவுநீர் கால்வாய் அமைப்பு

Added : அக் 13, 2019
Advertisement

ஓசூர்: ஓசூரில், பள்ளி மாணவியின் கோரிக்கையை ஏற்று, கழிவுநீர் கால்வாய் அமைக்க ஏற்பாடு செய்த மாநகராட்சி கமிஷனர், அதே மாணவியை வைத்து, புதிய கழிவுநீர் கால்வாயை திறக்க வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அண்ணாமலை நகர் அருகே உள்ள, தனியார் லே அவுட்டை சேர்ந்த ராஜலிங்கம் மகள் அமிழ்தினி, 14. இவர், டி.வி.எஸ்., அகாடமி பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி நிர்வாகம், மாணவர்கள் தங்களது பகுதியில் உள்ள பிரச்னை குறித்து தெரிவித்து, திட்ட அறிக்கை தயார் செய்ய கூறியது. தங்களது பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் ஏற்படும் பிரச்னை குறித்து, மாணவி அமிழ்தினி திட்ட அறிக்கை தயார் செய்தார். பள்ளி நிர்வாக அறிவுரைப்படி, அண்ணாமலை நகர் பகுதி மக்களிடம் கையெழுத்து பெற்று, திட்ட அறிக்கையை மனுவாக, கடந்த மூன்று மாதத்திற்கு முன், மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியத்திடம், மாணவி வழங்கினார். இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் மூலம், ஒன்பது லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், தனியார் லே அவுட் பகுதியில், 300 மீட்டர் தூரத்திற்கு புதிய கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது. இதன் திறந்து விழா, நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதற்கு வந்த மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியம், கால்வாய் அமைய காரணமாக இருந்த, மாணவி அமிழ்தினியை அழைத்து, திறந்து வைக்க கூறினார். மாணவி அமிழ்தினி ரிப்பன் வெட்டி, கால்வாயை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அப்போது பேசிய, மாநகராட்சி கமிஷனர், மாணவி அமிழ்தினியை போல், மற்ற மாணவ, மாணவியர் பொதுமக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X