பொது செய்தி

தமிழ்நாடு

உயிரை பணயம் வைத்து சாலையை கடக்கும் மாணவர்கள்: சப்-வே, நடைமேம்பாலம் அமைப்பது எப்போது?

Added : அக் 13, 2019
Advertisement

ஓசூர்: ஓசூர், தேசிய நெடுஞ்சாலையில், உயிரை பணயம் வைத்து, பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் சாலையை கடந்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஆட்கொல்லி சாலையாக உள்ளது. ஜூஜூவாடியில் துவங்கி, மேலுமலை வரை, அதிகளவில் விபத்து நடக்கிறது. கடந்த ஜன., முதல், செப்., 30 வரை நடந்த, 250க்கும் மேற்பட்ட விபத்துகளில், 110க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இப்பகுதியில், சாலையை கடந்தபோது விபத்தில் சிக்கி, இந்த ஆண்டில் மட்டும், 20க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தேசிய நெடுஞ்சாலையை கடக்க, நடை மேம்பாலம், சப்-வே இல்லாதது தான் காரணம் என, மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு, ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி வரை, 13 இடங்களை கண்டறிந்து, சப்-வே, நடை மேம்பாலம் மற்றும் இரு மேம்பாலம் அமைக்க, ஒப்புதல் வழங்கப்பட்டு, இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசிற்கு ஆவணம் அனுப்பப்படும் என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர், மூக்கண்டப்பள்ளி லால், தர்கா, சீத்தாராம்மேடு, பேரண்டப்பள்ளியில் நடை மேம்பாலம் அமைக்க பூமிபூஜை போட்டு பல மாதமாகியும், இதுவரை பணிகள் துவங்கவில்லை. மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள், தங்களது உயிரை பணயம் வைத்து, தேசிய நெடுஞ்சாலையை ஆபத்தான முறையில் கடக்கின்றனர். அதிவேகமாக வரும் வாகனங்கள், கூட்டமாக சாலையை கடக்கும் மாணவ, மாணவியர் மீது மோதினால், அதிகளவு உயிர் சேதம் ஏற்படும். அதற்கு முன்பாக, மாவட்ட நிர்வாகம், சப்-வே, நடை மேம்பாலம், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை அறிந்து, பணிகளை துரிதப்படுத்த, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X