சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் பலி

Added : அக் 13, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கணவாபட்டியில், கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் பலியானார். கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலை கணபதி நகரை சேர்ந்தவர் பாபு, 27; இவர், பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று, புரட்டாசி நான்காவது சனிக்கிழமை என்பதால், கிருஷ்ணகிரி அடுத்த கணவாபட்டி வெங்கட்ரமணர் கோவிலுக்கு சென்றார். அங்கு வேண்டுதலுக்காக, மொட்டை அடித்து கொண்ட பாபு, கோவில் குளத்தில் குளித்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர், நீச்சல் தெரியாததால் குளத்து நீரில் மூழ்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு செல்வதற்குள், பாபு குளத்தில் மூழ்கி மூச்சுத்திணறி பலியானார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த மாதம், 24 முதல் நேற்று வரையில், நீர்நிலைகளில் மூழ்கி, 20 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டத்தில் தொடர்ந்து நீர்நிலைகளில் மூழ்கி பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X