பொது செய்தி

இந்தியா

முத்தலாக் சட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (59)
Share
Advertisement
லக்னோ : இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடை சட்டத்திற்கு அனைத்து இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட கழகம் (AIMPLB - The All India Muslim Personal Law Board) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள

லக்னோ : இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் தடை சட்டத்திற்கு அனைத்து இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட கழகம் (AIMPLB - The All India Muslim Personal Law Board) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.latest tamil newsமுத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக சட்டப்படி முறையீடு செய்யவும் இஸ்லாமிய அமைப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news


இது குறித்து இவர்கள் கூறுகையில், இஸ்லாமிய பெண்கள் மற்றும் குழந்தைகளின் திருமண உரிமை சட்டத்தை பாதுகாப்பதாக கூறி இந்த சட்டம் இஸ்லாமிய பெண்களின் திருமண வாழ்வை சிதைக்கிறது. இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல். நாட்டின் தனித்துவத்தை அழிக்கும் விதமான கோர்ட் அல்லது வேறு எந்த சட்டரீதியான அமைப்பின் செயல்பாட்டையும் எங்கள் கழகம் எதிர்க்கும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், அயோத்தி வழக்கில், இஸ்லாமியர்களுக்கு சாதகமாகவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு இருக்கும் எனவும், அப்படி இருந்தால் மட்டுமே உரிமை மற்றும் நீதி நிலைநாட்டப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
13-அக்-201921:38:17 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga முஸ்லீம் பெண்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாவதால்தான் இந்த சட்டமே கொண்டு வரப்பட்டது. கடந்த இரு நாட்கலுக்கு முன்பு டில்லியில் ஒரு இஸ்லாமிய பெண்ணை மார்டனாக உடை உடுத்தவில்லை என்று கூறி முத்தலாக் செய்து விட்டார். இது பரவாயில்லையா? மேலும் உச்சநீதி மன்ற தீர்ப்பு தங்களுக்குத்தான் சாதகமாக வரவேண்டும் என்று இந்த அமைப்பு கூறுவது மிகவும் வேடிக்கையாய் உள்ளது.
Rate this:
Cancel
rmr - chennai,இந்தியா
13-அக்-201920:27:18 IST Report Abuse
rmr இந்த சட்டம் முஸ்லீம் நாட்டிலேயே கிடையாது இங்க மட்டும் எதெற்கு எதிர்ப்பவர்களை நாடு கடத்தவும்
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
13-அக்-201919:54:35 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam நாடு இரண்டாகப் பிளந்தும், இன்னும் பிரச்னை முடியாதது கவலைக்குரியது. மனுநீதி காப்பாற்றப்பட வேண்டும். புதிய பாரதம் உதயமாக வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X