இந்தியாவும் சீனாவும் ஒளிர வேண்டும்: ஜின்பிங்

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (15)
Advertisement
ஸீ ஜின்பிங், ஜின்பிங்,  சீனா, சீன அதிபர், இந்தியா, பிரதமர் மோடி, மாமல்லபுரம், மோடி, Xi Jingping, Jingping, china, chinese president, Modi, PM Modi, Mamallapuram,

பீஜிங்: சீனாவும், இந்தியாவும் பரஸ்பர சாதனைகளை செய்து ஒருவருக்கொருவர் ஒளிர வேண்டும் என சீன அதிபர் ஸீ ஜின்பிங் கூறியுள்ளார்.

மாமல்லபுரத்தில் நடந்த பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் ஜின்பிங், நேபாளம் கிளம்பி சென்றார்.இதனை தொடர்ந்து, தனது இந்திய பயணம் குறித்து ஜின்பிங் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவும், சீனாவும் ஒருவருக்கு ஒருவர் வளர்ச்சியை பற்றி சரியான பாதையின் மூலம் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்த வேண்டும். எந்தவொரு கண்ணோட்டத்தில் இருந்தும் சீனாவும், இந்தியாவும் நல்ல அண்டை நாடுகளாகவும்,நலலுறவுகளாகவும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து கைகோர்த்து முன்னேற வேண்டும். டிராகன் மற்றும் யானை நடனத்தை தேர்வு செய்வது சீனாவிற்கும், இந்தியாவிற்கும் ஒரே சரியா தேர்வாகும். இது இரு நாடுகள் மற்றும் அவர்களின் மக்களின் அடிப்படை நலன்களுக்காக உள்ளது.




இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகள், சரியான முறையில் தீர்க்கப்பட வேண்டும். இந்த பிரச்னைகள், இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மூலம் கிடைக்கும் நலன்களை சிதைத்துவிட அனுமதிக்கக்கூடாது. அதேநேரத்தில், இரு நாடுகளும், தொடர்பு மூலம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், பிரச்னைகளை தீர்க்கவும் வேண்டும். இரு நாடுகளும் நட்பு மூலம் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சீனா தன்னை நன்கு வளர்த்து கொள்ளும் என நம்புகிறது. இந்தியாவும் நன்றாக உள்ளது. சீனாவும், இந்தியாவும் பரஸ்பர சாதனைகளை செய்து ஒருவருக்கொருவர் ஒளிர வேண்டும். முறைசாரா உச்சி மாநாடு, ஒரு புத்திசாலித்தனமான முடிவு. பிரதமர் மோடியுடன் ஆழ்ந்த முறையில் மேலும் ஆலோசனையின் மூலம், திட்டங்களை மேற்கொள்வதற்கும் தான் காத்திருக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜின்பிங் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
14-அக்-201902:19:09 IST Report Abuse
spr "இந்தியாவும், சீனாவும் ஒருவருக்கு ஒருவர் வளர்ச்சியை பற்றி சரியான பாதையின் மூலம் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்த வேண்டும். எந்தவொரு கண்ணோட்டத்தில் இருந்தும் சீனாவும், இந்தியாவும் நல்ல அண்டை நாடுகளாகவும்,நலலுறவுகளாகவும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து கைகோர்த்து முன்னேற வேண்டும்." இது காலத்தின் கட்டாயம் இல்லையேல் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் ஆசிய நாடுகளை அடிமைகளாகவே, இல்லையேல் அடிமை ஆகா வாய்ப்புள்ள நாடுகளாகவே பார்க்கும். பன்னாட்டு நிதி நிறுவனங்கள் ஐ நா சபை உட்பட அனைத்துமே மறைமுகமாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் கட்டுப்பட்டிலேயே உள்ளது அவ்வப்பொழுது அவை ஆசிய நாடுகளை மட்டம் தட்டி அறிக்கை வெளியிடுவதுவும், நாமும் வெள்ளைத் தோல்காரன் சொல்வது வேத வாக்கு என்றெண்ணுவதுவும், ஆதரித்துக் கூக்குரலிடுவதுவும் நடந்து கொண்டுதானிருக்கிறது இது மாற வேண்டும் ஆசிய நாடுகளின் பிரதிநிதியாக நாம் உருவாக அனாதை நாடுகளுடன் நட்புறவு கொள்ள வேண்டும் மக்கள் சீன பொருட்களை வாங்குவதில்லை என முடிவெடுத்தால், தரமான பொருட்களை இந்தியாவிலேயே தயாரித்து மலிவாகக் கொடுத்தால், மக்களே சீன பொருட்களை வாங்காமல் ஒதுக்குவார்கள் அரசு முடிவெடுத்தால்தான் பிரச்சினை மக்களே முடிவெடுத்தால் எதுவும் இல்லை ஆனால் பொருட்களின் தரம், நுகர்வோர் காப்புரிமை, அகவிலைக்குறைப்பு இவை குறித்த கண்ணோட்டம் முறையான ஒன்றாக இல்லை என்பதே நம் பொருட்களை எவரும் விரும்புவதில்லை என்ற நிலைக்கு காரணம்
Rate this:
Share this comment
Cancel
Naren - Chennai,இந்தியா
13-அக்-201922:27:15 IST Report Abuse
Naren பிரதமர் அவர்கள் ஒரு சிலரின் நன்மைக்காகே மட்டும் செயல்படமால் நாட்டு மக்கள் நலன் கருதி நாட்டின் வளச்சியை மனதில் வைத்து செயல் பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
13-அக்-201919:45:58 IST Report Abuse
ஆப்பு நாம சீனாவுக்கு ஏற்றுமதி பண்ணுறதை விட அங்கேருந்து இறக்குமதி ஆண்டுக்கு சுமார் 45 பில்லியன் டாலர் அதிகமாம் கையக் காலப் புடிச்சு நம்ம கிட்டேருந்து ஏதாவது லேகியம் வாங்க வெக்கணும். அமெரிக்காவுக்கே அல்வா குடுக்குறாங்க சீனா. நாம அமெரிக்கா, சீனா, ஃப்ரான்சு, ரஷ்யான்னு எல்லா இடத்திலேருந்தும் இறக்குமதி செஞ்சு குவிக்கிறோம். புரியறவங்களுக்கு புரியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X