புனே: இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய பவுலர்கள் அசத்த, தென் ஆப்ரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறுகிறது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. இரண்டாவது டெஸ்ட் மகாராஷ்டிராவின் புனேயில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 601/5 ரன்களுக்கு 'டிக்ளேர்' செய்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இன்று நான்காம் நாள் ஆட்டம் நடக்கிறது. 326 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி, 'பாலோ ஆன்' தந்தது. இதனால், தென் ஆப்ரிக்க அணிக்கு மீண்டும் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இஷாந்த் பந்தில் மார்க்ரம் டக் அவுட்டானார். புருய்ன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அஷ்வின் 'சுழலில்' கேப்டன் டுபிளசி (5), எல்கர் (48) சிக்கினர். உணவு இடைவேளையின்போது, தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்து, 252 ரன்கள் பின்தங்கி இருந்தது. பவுமா (2), குயின்டன் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.