மோடி உறவினரிடம் திருட்டு: குற்றவாளி கைது

Added : அக் 13, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
மோடி உறவினரிடம் திருட்டு: குற்றவாளி கைது

புதுடில்லி: பிரதமர் மோடி சகோதரர் மகளிடம் பணம், மொபைல் பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. இவரது மகள் தமயந்தி பென் மோடி. இவர் நேற்று(அக்.,12) அமிர்தசரஸ் நகரில் இருந்து டில்லிக்கு சென்றார். இதற்காக, டில்லியில் உள்ள குஜராத்தி சமாஜ் பவனில் அறை ஒன்றை முன்பதிவு செய்திருந்தார். பழைய டில்லி ரயில்நிலையத்தில் இருந்து, தங்க உள்ள இடத்திற்கு ஆட்டோவில் சென்றார். ஆட்டோவில் இருந்து இறங்கிய போது பைக்கில் வந்த மர்மநபர்கள், தமயந்தியிடம் இருந்த கைப்பையை பறித்து சென்றனர். அதில் ரூ.56 ஆயிரம் ரொக்கம், 2 மொபைல் போன், டெபிட் கார்டு ஆகியவை இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, தமயந்தி போலீசாரிடம் புகார் அளித்தார். கவர்னர், முதல்வர் ஆகியோர் அந்த பகுதியில் தான் வசித்து வருகின்றனர். விவிஐபிக்கள் வசிக்கும் பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரமாக செயல்பட்டனர். குழுக்களை அமைத்த அவர்கள், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதனடிப்படையில், நோனு என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மற்றும் 2 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
13-அக்-201918:03:22 IST Report Abuse
K.Sugavanam கடவுளின் சித்தம்..
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
13-அக்-201917:53:33 IST Report Abuse
suresh kumar //விவிஐபிக்கள் வசிக்கும் பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் // அப்போ சாதாரண மக்கள் வசிக்கும் இடங்களில்?
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
13-அக்-201917:35:05 IST Report Abuse
Nallavan Nallavan மோதியின் குடும்பம் திருட்டுக் கொடுக்கிறது ...... எங்கள் தலைவனின் குடும்பம் அப்படியே ஆப்போசிட் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X