பொது செய்தி

தமிழ்நாடு

நாங்குநேரி 4 வழிச்சாலையில் பராமரிப்பு பூஜ்யம் : தினமும் வசூல் ரூ 10 லட்சம் வசூல்: பயணிகள் அவதி

Added : அக் 13, 2019 | கருத்துகள் (7)
Advertisement
நாங்குநேரி 4 வழிச்சாலையில் பராமரிப்பு பூஜ்யம்   :  தினமும் வசூல் ரூ 10 லட்சம் வசூல்: பயணிகள் அவதி

திருநெல்வேலி: நாங்குநேரி தொகுதியில் நான்குவழி்ச்சாலை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி விபத்துக்கு வழிவகுக்கின்றன.
மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் நான்குவழிச்சாலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியும் முக்கிய பகுதியாகும். நாங்குநேரி தொகுதியில் சுமார் 40 கி.மீ.,துாரம் நான்குவழிச்சாலை உள்ளது. ஆனால் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாங்குநேரியில் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரிப்பை கண்டுகொள்ளாமல் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக மாறிவருகிறது. நாங்குநேரி ஊருக்குள் நுழைவதற்கு முன்பாக சுங்கச்சாவடி உள்ளது.
சுங்கச்சாவடியில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு கழிப்பறை வசதியோ, சிறிய கடை வசதியோ இல்லை. இதற்காக ஒன்றரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மற்ற மூன்று இடங்களிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்குவந்துவுிட்டன. ஆனால் நாங்குநேரியில் சுங்கச்சாவடியில் இன்னமும் கழிப்பறை வசதியில்லை.

நாங்குநேரியில் நான்குவழிச்சாலையில் பாணான்குளத்தில் இரண்டு புறங்களிலும் உள்ள பஸ் பயணிகளுக்கான நிழற்குடையில் நிற்கமுடியாமல் இருந்தது. பொதுமக்களே ஓலைகளை வேய்ந்து மழைக்கும், வெயிலுக்கும் ஒதுங்குகிறார்கள். பாணான்குளம், டக்கரம்மாள்புரம் ஆகிய இடங்களில் தலா 15 லட்சம் ரூபாய் செலவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்துதந்த உயர்கோபுரமின் விளக்கு இன்னமும் செயல்பாட்டுக்குவராமல் உள்ளது.


2 மணி நேரத்தில் 10 லட்சம்


கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ரோடு மீண்டும் புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் அனேக அடங்களில் நடுரோட்டில் மழைநீர் குளம்போல தேங்கி நின்று விபத்துக்கு வழிவகுக்கின்றன. அதிகம் உயிர்ப்பலியாகும் விபத்துகள் நடக்கும் பகுதியாக மூன்றடைப்பு, நாங்குநேரி, ரெட்டியார்பட்டி ஆகிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நாங்குநேரி தொகுதியில் வளர்ச்சி திட்டங்களைத்தான் மேற்கொள்ள வில்லை.
நாங்குநேரி சுங்கச்சாவடியில் தினமும் 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலாகிறது. இந்த வழியாக செல்லும் பயணிகள் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படைவசதிகளை கூட இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இதனை முறையாக பராமரிக்க வேண்டியது கடமையாகும்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
13-அக்-201916:53:37 IST Report Abuse
Apposthalan samlin உண்மையில் இந்த ரோடு பராமரிப்பு அறவே கிடையாது நடு ரோட்டில் பள்ளங்கள் அதிகமாக உள்ளது. மழை நேரத்தில் பள்ளங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. செடிகள் வைத்தார்கள் தண்ணீர் ஊற்றுவது கிடையாது இதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்க அதிகாரிகளை கவனிப்பதாக சொல்ல படுகிறது .
Rate this:
Share this comment
Cancel
Arivu - Salem,இந்தியா
13-அக்-201916:50:38 IST Report Abuse
Arivu கருத்து கூறினால் Anti-Indian என முத்திரை குத்திவிடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
13-அக்-201916:25:17 IST Report Abuse
pattikkaattaan ஒரு முறை டோல் கேட் அமைந்துவிட்டால் போதும் , காலத்திற்கும் வசூல்தான் .. இதில் அவ்வப்போது கட்டண உயர்வு வேறு .. டோல் கேட் காண்ட்ராக்ட் ஏடுக்கவேண்டியே ஒருவர் எட்டுவழிச்சாலை அமைத்தே தீருவேன் என்கிறார் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X