பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு: துணை கமிஷனர் விளக்கம்

Added : அக் 13, 2019 | கருத்துகள் (10)
Advertisement

சென்னை: சென்னையில் நிருபர்களை சந்தித்த போலீஸ் இணை கமிஷனர் சுதாகர் கூறியதாவது: சீன அதிபர் ஸீ ஜின்பிங் வருகையின் போது பாதுகாப்பு பணிக்காக பிற மாவட்ட போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். ஒரு மாதத்திற்கு முன்பே பாதுகாப்பு பணிகளை துவக்கினோம். விவிஐபிக்கள் வருகையின் போது உள்ள அச்சுறுத்தல்கள் குறித்து ஆராயப்பட்டது. மிகவும் நுணுக்கமான விஷயங்களையும் ஆராய்ந்தோம்.
கிருஷ்ணகிரி சுங்கசாவடியில் இருந்தே கண்காணிப்பு பணிகள் துவங்கின. ஒவ்வொரு பணிக்கும், பொருத்தமான ஆட்களை தேர்வு செய்து, நியமிக்கப்பட்டனர். மாமல்லபுரம் வரை உள்ள பகுதிகள் அனைத்தும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்யப்பட்டது.

ஜின்பிங், செல்லவிருந்த பாதைகளில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டன. பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் கண்காணித்தோம். அச்சுறுத்தலுக்கான வாய்ப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஓய்எம்ஆர் சாலையில், கட்டடங்கள், வணிக வளாகங்கள், கடைகள், வாடகை வீடுகள் அனைத்தையும் கண்காணிக்கப்பட்டன. உயரமான கட்டடங்கள் முழுவதும் சல்லடை போட்டு சலித்தெடுத்து போய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

200 போலீசார் கொண்ட குழு அமைக்கப்பட்டு 35 கி.மீ., தூர பகுதி முழுமையும் ஆய்வு செய்தோம். ஓட்டல், ரயில்கள், பஸ்களில் புக்கிங் முரண்பாடு உள்ளதா எனவும், மொத்தமாக புக் செய்யப்படுகிறதா எனவும் கண்காணிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் வழிதடங்கள், மின்சார ரயில் செல்லும் தடங்களும் சோதனை நடந்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஓட்டல் நிர்வாகங்களுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இரு வழி சாலைகளிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

எங்களது பணிக்கு சென்னை மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர். எங்களுக்கு உதவி செய்தனர். சோதனையில், சில பிரச்னைகள் ஏற்படும் என்பதை முன்னரே தெரிவித்துவிட்டோம். எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சீன அதிகாரிகள், சில பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூறிய போது, அதனை நாங்கள் முன்னரே செய்திருந்தோம். இதனை நாங்கள் தெரிவித்த போது, அவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். எதிர்பார்த்ததை விட சிறப்பாக பணியாற்றியதாக தெரிவித்தனர். சீன பாதுகாப்புகுழு எதிர்பார்த்த அத்தனை அம்சங்களும்இடம்பெற்றிருந்தது. சிறு அசம்பாவிதம் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இரு்ந்தோம் அதில் வெற்றி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
14-அக்-201913:06:12 IST Report Abuse
S.P. Barucha பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
14-அக்-201907:54:49 IST Report Abuse
amuthan இவ்வளவு பாதுகாப்பு போட்ட பிறகு எப்படி சார் கடல் கரையில் குப்பை வந்தது
Rate this:
Share this comment
Cancel
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
14-அக்-201901:55:16 IST Report Abuse
sathiya narayanan எப்படி சார் அந்த திபெத்தியர்கள் ஹோட்டல் வரை விட்டர்கள்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X