பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் அலைமோதும் கூட்டம்

Added : அக் 13, 2019 | கருத்துகள் (12)
Advertisement

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் இருவரும் மாமல்லபுரம் கடற்கறை கோவில் வளாகத்தில் சந்தித்தனர். இதற்காக, மாமல்லபுரம் கலைசிற்பங்கள் அனைத்தும் அழகுபடுத்தப்பட்டன. இரு தலைவர்கள் சந்திப்பை தொடர்ந்து, அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. சந்திப்பு முடிந்து இருவரும் கிளம்பி சென்றனர். இதனையடுத்து நேற்று மதியம் முதல், அங்கு தடை விளக்கப்பட்டது. இதனால், மகாபலிபுரம் இயல்புநிலைக்கு திரும்பியது. 3 மணி முதல் சுற்றுலா பயணிகள் அங்கு குவிய துவங்கினர்.
வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில் வளாகம் போன்ற பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். விடுமுறை தினமான இன்றும், பொது மக்கள் கூட்டம், மாமல்லபுரத்தில் அலைமோதுகிறது. மூடப்பட்ட கடைகளும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. ஓட்டல்கள் வழக்கம் போல் செயல்படுகின்றன. இன்று(அக்.,13) கடற்கரை கோவில், ஐந்து ரதத்தை பார்ப்பதற்காக நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அர்ச்சுனன் தபசு, குடைவரை கோவில் பகுதிகளில் ஆயிரகணக்கான மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அங்குபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Believe in one and only God - chennai,இந்தியா
13-அக்-201922:11:27 IST Report Abuse
Believe in one and only God தமிழக அரசு மாமல்லபுரத்தை மிக பெரிய சுற்றுலாத்தலமாக ஆக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
13-அக்-201918:59:28 IST Report Abuse
 N.Purushothaman குப்பை போடறது ,காரி துப்பறது ,சேதப்படுத்துவது என இல்லாமல் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால் இந்த சுத்தம் நீண்ட நாளைக்கு இருக்கும் ...
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
13-அக்-201918:33:16 IST Report Abuse
Ray அந்த காலத்திலேயே சாஞ்சா சாயிர பக்கமே சாயிர செம்மறியாடுகளா ன்னு ஒரு பாட்டு போட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X