புனிதரானார் மரியம் த்ரேசியா: போப் அறிவிப்பு

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (34)
Advertisement
Pope Francis, Indian nun, Mariam Thresia,sainthood,புனிதர், மரியம் த்ரேசியா, போப், அறிவிப்பு

வாடிகன்: கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி மரியம் த்ரேசியாவை, புனிதராக, போப் பிரான்சிஸ் அறிவித்தார்.

வாடிகனில் நடந்த விழாவில், மரியம் த்ரேசியாவோடு சேர்ந்து, இங்கிலாந்தை சேர்ந்த கார்டினர் ஜான் ஹென்றி நியூமேன், சுவிட்சர்லாந்தை சேர்ந்த கன்னியாஸ்திரி மார்க்ரெட் பேஸ், பிரேசிலை சேர்ந்த கன்னியாஸ்திரி டுல்சி லோப்ஸ் இத்தாலியை சேர்ந்த கன்னியாஸ்திரி வன்னினி ஆகியோரும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த விழாவில், வெளியுறவு இணை அமைச்சர் வீ. முரளிதரன் தலைமையில் இந்திய குழுவினர் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் கேரளாவில் உள்ள பழமை வாய்ந்த சிரியோ - மலபார் தேவாலயத்தில் புனிதராக உயரும் 4வது கன்னியாஸ்திரி த்ரேசியா ஆவார். இதற்கு முன்னர், கடந்த 2008 ல் கன்னியாஸ்திரி அல்போன்ஸா, பாதர் குரியகோஸ் என்ற சாவரா அச்சன், கன்னியாஸ்திரி எபுராசியா என்ற எபுராசியம்மா ஆகியோர் கடந்த 2014 ல் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர.





கேரளாவின் திரிச்சூர் மாவட்டம், புத்தென்சிராவை சேர்ந்தவர் மரியம் த்ரேசியா. இவர் 1876 ம் ஆண்டு மே 3ம் தேதி பிறந்தார். சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். 1914 ல் புத்தன்சிராவில் கன்னியாஸ்திரியாக வாழ்க்கையை துவங்கினார். மதம் சார்ந்த பணிகள் மட்டுமின்றி, சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டினார். கேரளாவில் பெண் கல்விக்காக அதிகம் பாடுபட்டார்.2 பள்ளிகள், 3 கான்வென்ட்டுகள், ஒரு ஆதரவற்ற இல்லத்தை துவங்கினார். கடந்த 1926 ஜூன் 8 ல் தனது 50ம் வயதில் த்ரேசியா உயிரிழந்தார்.

கடந்த மாதம் ஒளிபரப்பான 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில், மரியம் த்ரேசியாவிற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-அக்-201912:39:00 IST Report Abuse
பச்சையப்பன் எந்த இந்து சாமியார்களுக்கு புனிதர் பட்டம் கிடைத்துள்ளதா???.
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
14-அக்-201909:12:26 IST Report Abuse
vasanthan பாவமன்னிப்பு வாங்கியாச்சா ...
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-அக்-201911:21:46 IST Report Abuse
Nallavan Nallavanஒருவேளை .... அதனால்தானோ புனிதர் பட்டம் .........
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
14-அக்-201908:05:28 IST Report Abuse
sridhar கிறிஸ்துவம் கத்தோலிக்கத்தை விட்டு நகர்ந்து வேறு வேறு பிரிவுகளுக்கு செல்கிறது. ஏகப்பட்ட பிரிவுகள் உள்ளன. கத்தோலிக்கத்தின் பிடி தளருகிறது. இந்த நேரத்தில் தான் கத்தோலிக்கம் புனிதர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது. புனிதர் என்றாலே அற்புதங்கள் நிகழ்த்தி irukka வேண்டும் . அற்புதங்கள் மேல் மயக்கம் கொண்ட மக்கள் கத்தோலிக்கத்தின் பிடியில் வருவார்கள் என்ற எண்ணத்தில் தான் இப்படி. தெரசாவுக்கு புனிதர் பட்டம் கொடுக்கும்போது ஏற்பட்ட objection எல்லாம் விரைவில் overrule செய்யப்பட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X