பொது செய்தி

இந்தியா

இன்ஸ்டாகிராமில் மோடியை பின் தொடரும் 3 கோடி பேர்

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement

புதுடில்லி: டுவிட்டரில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட உலக தலைவர்களில் ஒருவரான பிரதமர் மோடியை , தற்போது இன்ஸ்டாகிராமிலும் 3 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.



latest tamil news



இந்திய அரசியல் தலைவர்களில் மோடியை தான் டுவிட்டரில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பின்தொடருகின்றனர். அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்பிற்குப் பிறகு, உலகிலேயே டுவிட்டரில் அதிகம் பின்பற்றப்பட்டு வரும் இரண்டாவது அரசியல்வாதியாக மோடி உள்ளார். டுவிட்டரில், 5.07 கோடி பேர் அவரை பின் தொடர்கின்றனர்.


latest tamil news



இந்நிலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமிலும், 3 கோடி (30 மில்லியன்) பேர், பிரதமர் மோடியை பின்தொடர்கின்றனர். உலக தலைவர்களில் இதுவரை அமெரிக்க அதிபர் டிரம்ப்(14.9 மில்லியன்), முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா(24.8 மில்லியன்) பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். இதனையடுத்து உலக அரசியல் தலைவர்களில் அதிகம் பேர் பின்தொடரும் அரசியல் தலைவராக பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.

இதுகுறித்து பா.ஜ., செயல்தலைவர் ஜே.பி.நட்டா தெரிவிக்கையில், 'இது பிரதமர் மோடியின் புகழ் மற்றும் இளைஞர்களுடனான அவரது தொடர்புக்கு மற்றொரு சாட்சி' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
14-அக்-201904:13:06 IST Report Abuse
PANDA PANDI பின்தொடருகிறார்கள். சரி. நம்மவூரு கொ.கூ.மா வை 3.5 கோடி FOLLOWERs. AMBANIYAI
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
14-அக்-201904:06:12 IST Report Abuse
PANDA PANDI அறிஞர்களே INSTAGRAM தடை செய்யவேண்டும். குடும்பமே கடவுளாக இருக்கும் போதும் தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் இருந்தால் என்னவாம் குறைந்துபோகுது. இதைத்தான் 20 வருடமா சொல்லி கிட்டே இருக்கிறீர். இப்போ 38/39 மக்கள் கொடுக்கலையை சொம்பு ஜால்ஸ் . SO உங்களுக்கு கொசுத்தொல்லை மக்கள் வேம்பு கஷாயம் குடிக்கணுமா. WHAT A நீதி.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-அக்-201903:37:22 IST Report Abuse
J.V. Iyer இதெல்லாம் இருக்கட்டும், ஊழலிலும், பிராடிலும், மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதிலும் எங்கள் தேசிய, தமிழக குடும்ப அரசியல் கட்சிகளை முந்தமுடியுமா?? இவர்கள் தான் நம்பர் ஒன்னு, எப்போதும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X