கொலம்பியா பல்கலையில் திருநங்கையின் புத்தகம்| Dinamalar

கொலம்பியா பல்கலையில் திருநங்கையின் புத்தகம்

Added : அக் 13, 2019 | கருத்துகள் (1)
திருநங்கை, சுயசரிதை , புத்தகம், கொலம்பியா, பல்கலை, அமெரிக்கா, நூலகம்

வாஷிங்டன் : அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை கழகத்தில் தமிழக திருநங்கையின் சுயசரிதை இடம்பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி என்ற திருநங்கை தெனாவட்டு திரைப்படம் மூலம் பிரபலமானவர். திருநங்கைகளின் உரிமை மற்றும் உணர்வுகள் குறித்து ' உணர்வும் உருவமும் ' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இது பல விருதுகளை பெற்றது. தொடர்ந்து தனது சுயசரிதையை 'Truth about me ' என்று ஆங்கிலத்தில் வெளியிட்டார். இந்த சுயசரிதை புத்தகம் கொலம்பியா பல்கலையில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. திருநங்கையின் புத்தகம் இடம்பெற்றிருப்பது பலதரப்பட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X