திருச்சி: திருச்சி தனியார் நகைக்கடையில் கடந்த அக்.2ம் தேதி ரூ 13 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் கொள்ளயைர்கள் சுரேஷ், முருகன் சிக்கினர்.
தற்போது கொள்ளையன் முருகன் கொடுத்த தகவலின் பேரில் மதுரையைச் சேர்ந்த கணேசன் என்பவரிடமிருந்து மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையன் முருகனிடமிருந்து 12 கிலோ தங்கமும், மணிகண்டன் என்பவரிடமிருந்து ஏற்கனவே 4.25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.