பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் ; டிரைவர் தற்கொலை

Added : அக் 13, 2019 | கருத்துகள் (3)
Advertisement
தெலுங்கானா, பஸ் டிரைவர், உயிரிழப்பு, போக்குவரத்து கழகம், போராட்டம்

ஐதராபாத் : தெலுங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் பஸ் டிரைவர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவில் 48000 போக்குவரத்து ஊழியர்களை பணியில் இருந்து நீக்கினார் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ். இதனை கண்டித்து தெலுங்கானா சாலை போக்குவரத்து கழகம் சார்பில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் பஸ் டிரைவர் சீனிவாச ரெட்டி என்பவர் தற்கொலை முயற்சியாக தன் உடலில் தீ வைத்துக்கொண்டார். உடலில் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பிற்கு ஆளும் அரசுதான் காரணம் என போக்குவரத்து கழகம் குற்றச்சாட்டு கூறியுள்ளது. மேலும் அவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பொதுமக்களும் ஆதரவு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
14-அக்-201910:11:51 IST Report Abuse
Apposthalan samlin ஆ ஊ என்றால் தீ குளிப்பது 100 இல்லை ஒன் மில்லியன் பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாது . மாணவர்கள் தீ குளித்து தெலுங்கானா வந்தது இதை ராவ் என்னைக்காவது நினைத்தாரா ? பகுத்து அறிவு என்று ஓன்று இருந்தால் இந்த மாதிரி ஈன காரியம் செய்ய மாட்டான் .
Rate this:
Share this comment
Cancel
14-அக்-201909:22:04 IST Report Abuse
ஆப்பு முதல்வர் ரொம்ப நல்லவராச்சே... எல்லாரையும் வேலையிலிருந்து தூக்கிட்டு புதுசா வேலை வாய்ப்பை பெருக்குறாரு.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
14-அக்-201908:21:09 IST Report Abuse
தமிழ் மைந்தன் தெலுங்கானாவில் ஜெயலலிதா போல ஒரு துணிச்சலான திறமையான ஆள் ஆட்சி செய்தாலும், கருணாநிதி போல ஊழலில் அராஜகத்தில் ஈடுபடும் நபர்களும் பொதுமக்களை தூண்டிவிடும் செயலை சிறப்பாகவே செய்கிறார்கள்...... இவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு மட்டுமல்ல ....பண உதவியும் உண்டோ?.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X