பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் ; டிரைவர் தற்கொலை| Dinamalar

பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் ; டிரைவர் தற்கொலை

Added : அக் 13, 2019 | கருத்துகள் (3)
தெலுங்கானா, பஸ் டிரைவர், உயிரிழப்பு, போக்குவரத்து கழகம், போராட்டம்

ஐதராபாத் : தெலுங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் பஸ் டிரைவர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவில் 48000 போக்குவரத்து ஊழியர்களை பணியில் இருந்து நீக்கினார் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ். இதனை கண்டித்து தெலுங்கானா சாலை போக்குவரத்து கழகம் சார்பில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் பஸ் டிரைவர் சீனிவாச ரெட்டி என்பவர் தற்கொலை முயற்சியாக தன் உடலில் தீ வைத்துக்கொண்டார். உடலில் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பிற்கு ஆளும் அரசுதான் காரணம் என போக்குவரத்து கழகம் குற்றச்சாட்டு கூறியுள்ளது. மேலும் அவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பொதுமக்களும் ஆதரவு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X