பொது செய்தி

இந்தியா

டில்லியில் மின் திருட்டால் ரூ.400 கோடி நஷ்டம்

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (7)
Advertisement

புதுடில்லி: டில்லியில் அதிகரித்து வரும் மின்சார திருட்டு, போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், 5,500 புகார்கள் பதிவு செய்யப்பட்டு, 2,500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், ஆண்டுக்கு ரூ.400 கோடி நஷ்டம் ஏற்படுவதாக, தகவல் வெளியாகி உள்ளது.






தலைநகர் டில்லியில், 2002 முதல், மின்சார சேவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதை, மூன்று தனியார் மின் பகிர்வு நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றன. மின்சார சேவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட பின், அத்துறையில் இருந்து வந்த தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக ரீதியிலான நஷ்டம், 55 சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாக குறைந்தது. ஆனால், மின் திருட்டால் ஏற்படும் இழப்பு, ஆண்டொன்றுக்கு, 400 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதை தடுக்க, டில்லி போலீசார், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 'கடுமையான அபராதங்களுடன், ஐந்தாண்டு வரை சிறை தண்டனைகள் விதித்தும், மின் திருட்டை குறைக்க முடியவில்லை' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.





மேற்கு வங்கம் மற்றும் குஜராத்தில் இருப்பதை போல, மின் திருட்டு வழக்குகளை விசாரிப்பதற்கான தனி போலீஸ் ஸ்டேஷன்களை டில்லியில் அமைத்தால் மட்டுமே, இதை தடுக்க முடியும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில், மின் திருட்டு தொடர்பாக, 5,500 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 4,500 புகார்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2,500க்கும் அதிகமானோர், கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 200 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
14-அக்-201909:52:18 IST Report Abuse
pattikkaattaan மக்கள் சூரிய ஒளி மின் தகடுகளை பொருத்தி, தங்கள் வீடுகளிலேயே மின்சாரம் உற்பத்தி செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
14-அக்-201905:55:09 IST Report Abuse
chennai sivakumar Poor helmet fellows pay 10 times fine but electricity thieves have a cool escape. What a logi
Rate this:
Share this comment
Cancel
சமத்துவம் - Chennai,இந்தியா
14-அக்-201902:15:21 IST Report Abuse
சமத்துவம் மின் திருட்டு என்னும் செய்தி சரி தானா? சமீபத்தில் தான் கெஜ்ரிவால் அவர்கள் வாடகை வீடுகளுக்கு இலவச மின்சாரசம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார் என்று நினைக்கின்றேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X