பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளில் ஆபத்தான ரத்த பரிசோதனை

Added : அக் 13, 2019
Advertisement
  அரசு மருத்துவமனைகளில் ஆபத்தான ரத்த பரிசோதனை

கும்மிடிப்பூண்டி : அரசு மருத்துவமனைகளில், 24 மணி நேரத்தில், மூன்று முறை நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில், ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை, முன்னுக்குபின் முரணாக இருந்ததால், எந்த முடிவின் அடிப்படையில் சிகிச்சை அளிப்பது என, தெரியாமல், டாக்டர்கள் குழப்பம் அடைந்தனர்.


தட்டணுக்கள் குறைவு


திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில், மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், அங்குள்ள அரசு மருத்துவமனையில், தினமும், நுாற்றுக்கணக்கானவர்களுக்கு, ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, டெங்கு காய்ச்சலால், 'பிளேட்லெட்' எனப்படும், ரத்த தட்டணுக்கள் குறைந்துள்ளதா என கண்டறியவே, ரத்தப் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பரிசோதனையில், ரத்த தட்டணுக்கள் எவ்வளவு உள்ளன என்பதை பார்த்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

நோயாளிகளின் ரத்தத்தில், தட்டணுக்கள் ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், மேல் சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் வசித்து வரும் கமலேஷ், 46, என்பவருக்கு, ஐந்து நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்தது.

நேற்று முன்தினம், அங்குள்ள தனியார் மருத்துவமனையில், ரத்த பரிசோதனை செய்தார். அதில், ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை, 38 ஆயிரமாக இருந்தது. உடனடியாக, அரசு மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெறும்படிஅறிவுறுத்தப்பட்டார். அதன்படி, கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை சென்ற அவருக்கு, அங்கும் ரத்த தட்டணுக்கள் பரிசோதனை நடந்தது. அதில், 1.80 லட்சம் தட்டணுக்கள் உள்ளதாக கூறப்பட்டதால், நோயாளி குழப்பம் அடைந்தார்.

இருப்பினும், காய்ச்சல் தொடர்ந்ததால், கும்மிடிப்பூண்டியை அடுத்த, ஈகுவார்பாளையம் கிராமத்தில் உள்ள, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று சென்று, ரத்த பரிசோதனை செய்தார்.அதில், தட்டணுக்களின் எண்ணிக்கை வெறும், 4,000 ஆக இருந்தது. அங்கேயே இரண்டாவது முறையாக ரத்த பரிசோதனை செய்த போது, தட்டணுக்கள் எண்ணிக்கை 3,000 என, காண்பித்தது.


பெரும் குழப்பம்


அடுத்தடுத்த பரிசோதனை அறிக்கைகளை பார்த்த டாக்டர்களும், 'ஒரே குழப்பமாக இருக்குது... என்ன மாதிரி சிகிச்சை அளிப்பது என, தெரியவில்லை. நீங்கள் உடனே, '108' ஆம்புலன்ஸ் சேவை வாயிலாக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு போங்க...' என, பரிந்துரைத்தனர்.மருத்துவ பரிசோதனை முடிவு குளறுபடியால், குழப்பம் அடைந்த நோயாளியும், உடன் சென்றவர்களும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகினர்.

இது குறித்து, நோயாளியுடன் சென்ற உதவியாளர் ஒருவர் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில், ரத்த பரிசோதனை கருவிகள், சரியாக செயல்படுகின்றனவா என, சந்தேகமாக உள்ளது. ரத்த பரிசோதனை குளறுபடிகள், மருத்துவ சிகிச்சையிலும் குழப்பத்தை ஏற்படுத்தும். சிகிச்சையில் குளறுபடிஏற்பட்டால், நோயாளி உயிரிழக்க நேரிடும். உண்மை தன்மையை, சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆராய வேண்டும். இல்லாவிட்டால், தேவையின்றி நிகழும் உயிரிழப்புகளுக்கு, அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டி வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட நோயாளியின், ரத்த பரிசோதனை முடிவுகளை பார்க்கும் போது, ஏதோ குளறுபடி நடந்துள்ளது உறுதியாகிறது. ஆய்வு அறிக்கைகள் அனைத்தையும் சேகரித்து, தவறு எங்கு நடந்தது என்பதை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நிலை தொடராத வகையில், பரிசோதனை கருவிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.பெயர் சொல்ல விரும்பாத டாக்டர், அரசு மருத்துவமனை, கும்மிடிப்பூண்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X