மக்களை திசை திருப்பும் பா.ஜ., ராகுல் குற்றச்சாட்டு| Dinamalar

மக்களை திசை திருப்பும் பா.ஜ., ராகுல் குற்றச்சாட்டு

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (29)

லட்டூர் : நாட்டின் முக்கிய பிரச்னைகளிலிருந்து பா.ஜ அரசு மக்களை திசை திருப்புவதாக மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு அளித்துள்ளார்.






மகாராஷ்டிராவில் அக்.,21ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தொடர்ந்து அக்.,24ல் ஓட்டு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ - சிவசேனா மற்றும் தேசியவாத கட்சிகள் களமிறங்கியுள்ளன. கம்போடியா சென்றிருந்த காங்., எம்.பி. ராகுல் நாடு திரும்பிய பின் முதல்முறையாக லட்டூரில் உள்ள அவுசா நகரில் இன்று(அக்.,13) நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.





அப்போது அவர் பேசியதாவது: இந்த தேசத்தில் உள்ள இளைஞர்கள் அசிடம் வேலை கேட்டால், நிலவு குறித்த ஆராய்ச்சியை பற்றி கூறுகிறது. சந்திரயான் 2 திட்டத்தால் நாட்டு இளைஞர்களுக்கு என்ன பயன். நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் அது இளைஞர்களுக்கு உணவளிக்காது.





மேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் காங்., அரசால் நிறுவப்பட்டது. இஸ்ரோவின் நன்மைகளை பிரதமர் மோடி தமக்கு சாதகமாக்கி கொள்கிறார். தமிழகத்தில் சீன அதிபருடன் மோடி சந்திப்பு நடத்தினார். இவர்கள் பேச்சுவார்த்தையில் என்ன இடம்பெற்றிருந்தது, சீனப்படைகள் அத்துமீறல் குறித்து மோடி சீன அதிபரிடம் கேட்டாரா என தெரிய வேண்டும்.





நாட்டின் முக்கிய பிரச்னைகளிலிருந்து பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் சில ஊடகங்கள் தான் மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி நடைமுறை போன்றவை சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல்தான்.
இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X