பொது செய்தி

தமிழ்நாடு

மோடி - ஜின்பிங் அமர்ந்த நாற்காலி யாருக்கு சொந்தம் என்பதில் போட்டி

Added : அக் 13, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 மோடி - ஜின்பிங் அமர்ந்த நாற்காலி யாருக்கு சொந்தம் என்பதில் போட்டி

சென்னை: மாமல்லபுரத்தில், சீனா - இந்தியா இடையேயான பேச்சு வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், இளநீர் குடித்த போது, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் அமர்ந்திருந்த நாற்காலியை கைப்பற்றுவதில், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும், சமீபத்தில், சந்தித்து பேசினர்.முதல் நாள் சந்திப்பின் போது, ஐந்து ரதத்திற்கு அருகே, ரம்மியமான சூழலில், இருவரும் நாற்காலியில் அமர்ந்து பேசினர். அங்கு, இளநீர் கொடுத்து, சீன அதிபரை, பிரதமர் மோடி உபசரித்தார்.


சிறப்பு அனுமதி


இந்த நிகழ்ச்சி திடீரென ஏற்பாடு செய்யப்பட்டதாகும். சீன பாதுகாப்பு அதிகாரிகள் கூட, இளநீரை எடுத்து வந்த ஓட்டல் ஊழியரை அழைத்து, விசாரித்து தான் தெரிந்து கொண்டனர்.இரண்டு தலைவர்களின் சந்திப்பில், கடைசி நேரத்தில், இந்த நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக நாற்காலிகள், மேஜையை ஏற்பாடு செய்ய வேண்டும் என, இரண்டு மணி நேரத்திற்கு முன், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், மத்திய அரசு அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

இதையடுத்து, பொதுப்பணித் துறை கட்டடங்கள் பிரிவின் முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன், கிண்டியில் உள்ள ஒரு கடைக்காரரிடம் பேசினார்.தலைவர்கள் அமர்வதற்கு தேக்கு மரத்தால் செய்யப்பட்ட இரண்டு நாற்காலிகள், தேநீர் வைக்கும் மேஜை, மொழி பெயர்ப்பாளர்கள் அமர்வதற்கு, இரண்டு சிறிய நாற்காலிகள் அனுப்பி வைக்கும்படி கேட்டார்.

அதிகாரிகள் அனைவரும் விழா ஏற்பாடுகளில் இருப்பதால், அதற்கான தொகையை, சென்னை வந்ததும் வழங்குவதாக, அதிகாரி தெரிவித்துள்ளார். நாற்காலியை எடுத்து செல்வதற்கு, தமிழக டி.ஜி.பி., அலுவலகத்தில், சிறப்பு அனுமதி பெறப்பட்டது.நச்சரிப்புபின், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகர், தன் வாகனத்தில் ஏற்றி, கிண்டியில் இருந்து, மாமல்லபுரத்திற்கும் எடுத்து சென்று நாற்காலிகளை ஒப்படைத்தார்.

பாதுகாப்பு சோதனைகளுக்கு பின், அவை, மோடி - ஜின்பிங் அமர பயன்படுத்தப்பட்டன. நிகழ்ச்சி முடிந்ததும், உடனடியாக அந்த நாற்காலிகளை, பொதுப்பணி துறையினர் ரகசிய இடத்தில் பத்திரப்படுத்தி உள்ளனர்.இரு தலைவர்கள் சந்திப்பின் நினைவாக, இந்த நாற்காலிகளை வைப்பதற்கு, பொதுப்பணி துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆனால், 'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு என்பதால், அந்த நாற்காலிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என, மத்திய அரசு அதிகாரிகள், கேட்கத் துவங்கி உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, நாற்காலிகளை விற்பனை செய்த வர்த்தக நிறுவனம், 'ஒரு நாள் வாடகையை மட்டும் வசூல் செய்து கொள்கிறோம். அவற்றை, மீண்டும் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்' என, பொதுப்பணித்துறை அதிகாரிகளை, நச்சரிக்க துவங்கி உள்ளது. இதனால், தலைவர்கள் அமர்ந்த நாற்காலி, யாருக்கு கிடைக்கும் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-அக்-201905:38:35 IST Report Abuse
Bhaskaran அந்த காலத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாக நடிகை பத்மினி பிரச்சாரம் செய்து பேசி சென்றபின் ஒரு வெறி பிடித்த ரசிகன் ஓடிச்சென்று அந்த நாற்காலிக்கு முத்தம் கொடுத்தானாம் நேரில் பார்த்து தலையிலடித்துக்கொண்ட என் ஆசிரியர் திருமலை சொன்ன தகவல் இது
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-அக்-201916:57:29 IST Report Abuse
Natarajan Ramanathan வாடகைகூட வேண்டாம்......திருப்பி கொடுத்தால் போதும் என்று அந்த கிண்டி நிறுவனம் சொன்னால் நல்லது. திரும்ப கிடைத்தால் நல்ல விலைக்கு விற்கலாம். இல்லையேல் பொருளும் வராது பணமும் வராது என்பதுதான் இங்கு யதார்த்தம்.
Rate this:
Share this comment
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
14-அக்-201913:34:04 IST Report Abuse
s.rajagopalan விலையாவது கொடுப்பதாவது .... எப்படி கடத்தலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பர் ...மாணிக்கவேலுக்கு இன்னொரு வழக்கு ரெடியாகிக்கொண்டிருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X