பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்த மாதம் வெளியாகுது வனக்காவலர் தேர்வு முடிவு

Added : அக் 13, 2019
Advertisement

சென்னை: 'வனக்காவலர் பணிக்காக நடத்தப்பட்ட, ஆன்லைன் தேர்வு முடிவுகள், அடுத்த மாதம் இறுதியில் வெளியிடப்படும்' என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வுகள், இம்மாதம், 4, 5, 6ம் தேதிகளில் நடந்தன. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இத்தேர்வின், மதிப்பீட்டு பணி நடந்து வருகிறது. இதன் அடிப்படையில், தேர்வுக்கு பிந்தைய நடவடிக்கைகளில், வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் ஈடுபட்டுள்ளது. இதற்கான உத்தேச கால அட்டவணை தயாரிக்கப் பட்டுள்ளது.

இதன்படி, நவம்பர் நான்காவது வாரத்தில், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரி பார்த்தல், உடற்தகுதி ஆய்வு, உடற்தகுதி தேர்வு போன்றவை, சென்னையில் நடக்கும்.இதன்பின், நவ., 30க்குள், தேர்வு இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X