அரசுக்கு சவால் தருகிற விஷயம்!| Dinamalar

அரசுக்கு சவால் தருகிற விஷயம்!

Added : அக் 13, 2019 | கருத்துகள் (1)
Share
தற்போது தமிழகம் மட்டும் அல்ல, நாடு முழுவதும் சராசரியாக, 65 வயதுக்கு மேல் வாழும் மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. இது மாநில, மத்திய அரசுக்கு சவால் தரும் விஷயம். மொத்தம் உள்ள, 130 கோடி பேரில், இந்த வயதானவர் மருத்துவ செலவு, சிறிய குடும்ப வாழ்வாக மாறிய சமுதாயத்திற்கு அதிக சுமை என்று சொல்வதில் கூட தவறில்லை. தினசரி செலவினங்கள், அதைத் தாண்டி மருத்துவ செலவினம் என்று ஏற்படும் போது,

தற்போது தமிழகம் மட்டும் அல்ல, நாடு முழுவதும் சராசரியாக, 65 வயதுக்கு மேல் வாழும் மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. இது மாநில, மத்திய அரசுக்கு சவால் தரும் விஷயம். மொத்தம் உள்ள, 130 கோடி பேரில், இந்த வயதானவர் மருத்துவ செலவு, சிறிய குடும்ப வாழ்வாக மாறிய சமுதாயத்திற்கு அதிக சுமை என்று சொல்வதில் கூட தவறில்லை. தினசரி செலவினங்கள், அதைத் தாண்டி மருத்துவ செலவினம் என்று ஏற்படும் போது, குழந்தைகள் கல்வி செலவு, சுற்றுலாவிற்கான ஒதுக்கீட்டை, தனிநபர் வருமானம் ஈடுகட்டுமா என்பது பிரச்னை.

பொதுவாக, புற்றுநோய் வகைகளில் பல மற்றும் இதயநோய் மட்டும், எல்லாரும் அறிந்த தகவலாக மாறி இருக்கிறது. அதில் எத்தனை பேர் மீண்டு, இயல்பு வாழ்க்கை வாழ்கின்றனர் என்பதும், அதற்கான சிகிச்சைக்காகும் செலவுகளும் தெரிய வாய்ப்பில்லை. காரணம், உடற்கூற்று இயல், நோய்கள் பாதிப்பு, சுற்றுச் சூழல் பாதிப்பு, உணவால் ஏற்படும் உடல் உபாதைகள் பற்றிய பொது அறிவு, இன்னமும் அதிகரிக்கவில்லை. ஆனால், மருத்துவ சிகிச்சை பெறுவதில், எல்லா வயதினரும் பொறுமை காக்காமல் செயல்படும் அளவுக்கு, சமுதாயம் மாறி வருகிறது.

அதிலும் தமிழகத்தில் கல்வியறிவு கணிசமாக இருப்பதாலும், மருத்துவமனைகள் தரும் சிகிச்சைகள், ஓரளவு நம்பிக்கை தருவதாலும், அதிக மருத்துவர்கள், தங்களிடம் வரும் நோயாளிகள் பாதிப்பை ஓரளவு புரிய வைப்பதும் காரணம். அதனால், தற்போது குழந்தை பிறப்பு, கர்ப்ப கால பாதுகாப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் அதிக அளவில் முன்னேறியிருக்கின்றன. மருத்துவ உதவியுடன் குழந்தை பிறப்பு என்பது தமிழகத்தில் வளர்ந்திருப்பது இதற்கு ஓர் அடையாளம். ஆனால், மத்தியதர வயதினர் 45 வயதை எட்டும் போது, அவர்களுக்கு வரும் சில நோய் பாதிப்புகளில் வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம் அதிகரித்த சமுதாயம் ஆகி விட்டது,. இதனால், நீரிழிவு, அதைத் தொடர்ந்து இதயநாளங்களில் அடைப்பு அல்லது சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் பாதிப்பு வருகின்றன.

ஆனால், 60 வயதைக் கடந்து வாழும் பலர், இன்று அந்தந்த குடும்பங்களில் மருத்துவ செலவினத்தை அதிகரித்த நிலையில் உள்ளனர். தனியார் மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இவர்கள் சேர்ந்து, மருத்துவ உதவிபெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது அரசுக்கும் மருத்துவ துறைக்கும் ஏற்பட்டிருக்கும் சவாலாகும். டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, சில முக்கிய நோய்களுக்கான மருந்துகளின் விலை குறைப்பை, மத்திய அரசு செய்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இத்துறையின் செயலாக்கத்தை விரிவபடுத்துவதில் அக்கறைப்படுகிறார்.

தமிழகத்தில் பல்வேறு நல உதவித்திட்டங்கள் இருந்த போதும், மூத்தோர் பிரச்னைகளை அணுக இன்னமும் அதிக பயணம் மேற்கொண்டால், அதற்கு நிதி ஒதுக்கும் பிரச்னையும் சேரும். ஏனெனில் இப்போதைக்கு அகில இந்திய அளவில், வேலைபார்க்கும் குடும்பத்தலைவர்கள் அல்லது குடும்பத் தலைவியர், பெற்றோருக்கு மருத்துவ காப்பீடுக்கு செலவழிக்கும் விகிதம் அதிகரிக்கவில்லை. அதற்கு ஒரு காரணமாக, திருமணமானதும், அந்தக் குடும்பத்தினருக்கான காப்பீடு என்பது வருமான வரிச் சலுகையையும் தரும். அதே சமயம் இம்மாதிரி மூத்தோர் திடீரென நோய்வாய்ப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் பட்சத்தில்ரூ.ரூ. 50 ஆயிரத்திற்கும் அதிகமாக செலவினம் என்றால், அது அக்குடும்பத்தில் பிரச்னையாகி விடும்.அப்படிப் பார்க்கும் போது ,எதிர்பாராத மருத்துவ செலவை எதிர்நோக்கும் மத்திய தர குடும்பத்தின் பெரியவர்கள் சில நேரம் அச்சப்படுவது இயல்பானதே.

அதிலும் இந்த வயதினரில் 80 சதவீதம் பேர் எவ்வித மருத்துவ காப்பீடும் இன்றி, மாதந்தோறும் மருத்துவ ஆலோசனையில். மாத்திரைகளை சாப்பிட்டு எஞ்சிய காலத்தை கழிப்பதும் உண்டு. ஏனெனில் பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு தரும் அளவுக்கு வசதியான சம்பளம் உள்ளமிகவும் குறைவு. ஒரு முதற்கட்ட தகவலில் முதியோர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே இப்பாதுகாப்பில் உள்ளனராம். இதில் 18 வயது முதல் 25 வயது உள்ள ஆண்,பெண், 30 சதவீதம் பேர் எலும்பு முறிவுத்துறையில் சிகிச்சை பெறும் காலமாக மாறி இருக்கிறது. சிறு குழந்தைகள் மருத்துவ செலவினமும் அதிகரித்திருக்கிறது. இதனால். மிகக்குறைந்த வருவாய்ப்பிரிவினர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அவசியமாகிறது. குறைந்த மூன்று அல்லது நான்குலட்ச ரூபாயைத் தரும் மருத்துவ காப்பீடு என்பது சமுதாயத்தில் 50 சதவீதம் பேருக்கு எளிதாக கிடைக்காத பட்சத்தில் இது அதிகம் பேசப்படும் விஷயமாக மாறும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X