பொது செய்தி

இந்தியா

இந்திய பொருளாதார வளர்ச்சி சதவீதம் ; உலக வங்கி குறைப்பு

Updated : அக் 15, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (16)
Advertisement
உலக வங்கி, 6 சதவீதம், நிதியாண்டு, குறைப்பு, பொருளாதாரம்

புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.5 சதவீதமாக இருக்கும் என, உலக வங்கி கணித்திருந்தது. தற்போது அதை, 6 சதவீதமாக குறைத்துள்ளது. நாட்டில் பொருளாதார மந்தநிலை கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அது கணித்துள்ளது.


நடப்பு நிதியாண்டு


நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதமாக இருந்தது. இது, கடந்த, ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவு. மூலதன திட்டங்களில் அரசின் செலவினம் குறைந்தது, மக்களின் நுகர்வு குறைந்தது என, இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்த நிலையில், நாட்டின் தொழில் துறையின் வளர்ச்சியும், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் கடும் சரிவைக் கண்டது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியும், வட்டி விகிதங்களை குறைத்தது. நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.9 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. அது தற்போது, 6.1 சதவீதமாக குறைத்துள்ளது. இதுபோன்ற பல்வேறு அமைப்புகளும், பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய முன்னேற்றம் இருக்காது என்று கணித்துள்ளன. இந்த நிலையில், உலக வங்கி சமீபத்தில் தன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.


மந்தநிலை


அதில், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6 சதவீதமாக இருக்கும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தாண்டு ஏப்ரலில் வெளியிட்ட அறிக்கையில், பொருளாதார வளர்ச்சி, 7.5 சதவீதமாக இருக்கும் என, கணித்திருந்தது. 'தற்போதைய பொருளாதார மந்தநிலை தொடரும். இது இந்தியாவின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 'பின், படிப்படியாக வளர்ச்சி ஏற்படும். வரும், 2020 ஏப்ரலில் துவங்கும் அடுத்த நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, 6.9 சதவீதமாக இருக்கும்' என, உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
14-அக்-201918:13:04 IST Report Abuse
Sampath Kumar பங்களாதேஷ் நேபால் நாட்டின் வளர்ச்சியை விட இந்தியா வளர்ச்சி கம்மியாம் ??? உலக வாங்கி அறிக்கை சொல்லுது ??
Rate this:
Share this comment
Cancel
14-அக்-201913:36:47 IST Report Abuse
ஆப்பு பொருளாதார வளர்ச்சி குறையும் போது சினிமாக்கள் நல்லாப் போகுமாம். அதே போல் பீர், மது விற்பனை ஏகத்துக்கு போகுமாம். இப்போ இங்கே சினிமா பிச்சிக்கிட்டு போகுது. மது விற்பனை இன்னும் ஜோர். பங்குச் சந்தையில் விளையாடறவங்க UBL பங்குகளை வாங்கிக் குவிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
14-அக்-201912:31:10 IST Report Abuse
ஆப்பு போகப்போக சீனப் பொருட்கள் இறக்குமதி இங்கே அதிகமாகும். அமெரிக்காவில் கடந்த 40, 45 வருஷமா இப்பிடி நடந்துதான் இன்னைக்கு ட்ரம்ப் முழிச்சிக்கிட்டு சரி செய்ய முயல்கிறார். அதே மாதிரி ஒரு நிலைமை நமக்கு சீக்கிரமே வரும். இப்போவே இருக்கிற வேலையெல்லாம் காலியாகிக் கொண்டிருக்கின்றன. அப்போ, யாரோ செய்கின்ற இமாலயத் தவறுகள் சுட்டிக் காட்டப்படும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X