அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கோ பேக்; கம் பேக்' ; ஜெயகுமார் கிண்டல்

Added : அக் 13, 2019 | கருத்துகள் (10)
Advertisement
 'கோ பேக்; கம் பேக்' ; ஜெயகுமார் கிண்டல்

மதுரை: ''முன்பு கோ பேக் மோடி என்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தற்போது கம் பேக் மோடி என்கிறார்,'' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கிண்டலடித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: தமிழக அரசு, மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. 75 ஆயிரம் கோடி ரூபாயை மானியமாக வழங்கி வருகிறது. அம்மா உணவகங்களை, தற்போது அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றுகின்றனர்.உ.பி.,யில் மடிக்கணினி வழங்க முயற்சித்தும், செயல்படுத்த முடியவில்லை. தமிழக அரசு, இன்று வரை செயல்படுத்தி வருகிறது.

குற்றம் கூறுவதே, ஸ்டாலினின் வேலையாகி விட்டது. முன்பு, 'கோ பேக்' மோடி என்ற ஸ்டாலின், தற்போது, 'கம் பேக்' மோடி என்கிறார். பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜின்பிங் வருகைக்கு பின், மாமல்லபுரம் குறித்து, உலகமே பேசுகிறது. ஜனநாயக நாட்டில், நடிகர் விஜய் உட்பட யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VANNAI KUMAR - Chennai,இந்தியா
14-அக்-201915:24:57 IST Report Abuse
VANNAI KUMAR முதலில் மந்திரி ஜெயக்குமார் தனது ராயபுரம் தொகுதியில் தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறாக தெருக்களை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பேருந்து வசதிகளை ராயபுரம் தொகுதிஇல் குறைத்துக்கொண்டே வருகிறார்கள் அந்த குறைகளை களைய வேண்டும் இல்லையென்றால் ஜெயக்குமார் கோ பேக் தான் .
Rate this:
Share this comment
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14-அக்-201911:44:20 IST Report Abuse
sankaranarayanan 'கோ பேக்' மோடி என்ற ஸ்டாலின், தற்போது, 'கம் பேக்' மோடி என்கிறார். சரிசமமாக போயிடிச்சு விட்டுடுங்க
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-அக்-201910:38:57 IST Report Abuse
D.Ambujavalli எல்லாருமே ஆளாளுக்கும் லேசாகக் குத்திக்கொண்டு செல்ல விளையாட்டுதான் விளையாடுகிறார்கள் ஆனால் கொள்ளையில் சேர வேண்டியது போய்ச் சேர்ந்துவிடுகிறது நாம் தான் கோமாளிகளாக நிற்கிறோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X