சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈஸ்வரன் கோவிலில் இரு ஐம்பொன் சிலைகள் கொள்ளை

Added : அக் 13, 2019
Advertisement
 ஈஸ்வரன் கோவிலில் இரு ஐம்பொன் சிலைகள் கொள்ளை

மதுரை : விக்கிரமங்கலம் அருகே, வி.கோவில்பட்டி யில் மருதோதய ஈஸ்வரமுடையார் கோவிலில், இரு ஐம்பொன் சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே வி.கோவில்பட்டியில் உள்ள, மருதோதய ஈஸ்வரமுடையார் கோவில், 1,200 ஆண்டுகள் பழமையானது. அறநிலையத் துறை வசமுள்ள இக்கோவிலில், கிராம பிரதோஷ கமிட்டி சார்பில், செப்டம்பர், 8ல் சிவன், பார்வதி ஐம்பொன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிரதோஷ நாட்களில், இச்சிலைகளுக்கு அபிஷேகம் நடக்கும். நேற்று காலை, கோவில் கதவு திறந்து கிடந்தது.

கதவில் இணைக்கப்பட்டிருந்த இரும்புச் சங்கிலி, நெம்பி சிதைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவில், பின்பக்க சுவர் ஏறி, கோவிலுக்குள் புகுந்த நபர்கள், சிலைகளை கொள்ளை அடித்துச் சென்றது, போலீஸ் விசாரணையில் தெரிந்தது. சிலைகளின் மதிப்பு, 72 ஆயிரம் ரூபாய். கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X