பொது செய்தி

இந்தியா

ஐ.பி.எல்.,: புனே அணி வெற்றி

Updated : மே 10, 2011 | Added : மே 10, 2011
Advertisement

ஐதராபாத் : ஐ.பி.எல்., சீசன் 4 போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் நடந்த போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி புனே வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. டெக்கான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. டெக்கான் அணி சார்பில் ரவி தேஜா 30 ரன்களும், தவான் 24 ரன்களும், டுமினி 30 ரன்களும், எடுத்தனர். புனே அணி சார்பில் மார்ஷ் 4 விக்கெட்களும், யுவராஜ் சிங் 2 விக்கெட்களும் எடுத்தனர். இதன் மூலம் புனே அணி வெற்றி பெற 136 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் களமிறங்கிய புனே அணி 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் புனே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது; புனே அணி சார்பில் மணிஷ் பாண்டே 49 ரன்களும், ரைடர் 35 ரன்களும், சவரவ் கங்குலி 32 ரன்களும் எடுத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X