அரசியல் செய்தி

தமிழ்நாடு

'உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க., போட்டி'

Added : அக் 14, 2019 | கருத்துகள் (6)
Advertisement
 'உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க., போட்டி'

திருப்பூர் : ''உள்ளாட்சி தேர்தலில், அ.ம.மு.க., போட்டியிடும்,'' என, அதன் பொதுச் செயலர் தினகரன் கூறினார்.

திருப்பூரில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட, அ.ம.மு.க., பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், தினகரன் பேசியதாவது:ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் வரைதான், அ.தி.மு.க., நிலைத்திருக்கும். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை கொடுக்கத்தான், அ.ம.மு.க., உருவாக்கப்பட்டுள்ளது. வேறு, வேறு, சின்னங்கள் கிடைப்பதால், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில், அ.ம.மு.க., போட்டியிடவில்லை.

கட்சியைப் பதிவு செய்து, ஒரே சின்னம் கிடைத்தவுடன், போட்டியிட முடிவு செய்துள்ளோம். சிலர், பயந்து ஓடி விட்டதாக கூறுகின்றனர். ஜெ.,க்கு பின், என்னை தூக்கி நிறுத்தியவர்கள், கட்சி தொண்டர்கள் தான்; தலைவர்கள் அல்ல.அ.மு.மு.க., சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட உள்ளோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
18-அக்-201913:08:28 IST Report Abuse
narayanan iyer தினகரன் அவர்களே நீங்கள்தான் ஆர் கே நகர் தேர்தலின் போது சொன்னீர்கள் சின்னம் எதுவாக இருந்தாலும் வெற்றி பெறுவோம் என்றீர்கள் . இப்போ சின்னம் மாறி மாறி வருவதால்தான் இடை தேர்தலில் நிற்கவில்லை என்று சொல்கிறீர்கள் . உள்ளாட்சியில் கொஞ்சம் வென்றாவது சசிகலாவிடம் நல்லபெயர் எடுத்து மீண்டும் பணத்தை ஆட்டையை போடலாம் என்று பார்க்கிறீர்கள் .எல்லாம் ஒரு கனவுதான் . கனவுகள் காண்பதற்க்கு பூரண உரிமை உண்டு .
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-அக்-201913:24:56 IST Report Abuse
இந்தியன் kumar மாபியா கூட்டங்கள் மக்களால் நிராகரிக்க படும் இது வரும் 2021 தேர்தலில் நடக்கும் , அரசியலால் சொத்து சேர்த்தவர்கள் இனி அதனை இழப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
14-அக்-201913:27:16 IST Report Abuse
அருணா சேர்த்த!!பணத்தில் கொஞ்சம் தூவி சிறு தொண்டர்கள் தாவி விடாமல் பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கும். ஒண்ணரை கோடி மக்கள் எங்கே? ஆர்கே நகர் மக்களே தேடப்படும் லிஸ்டில் உங்களை வைத்துள்ளார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X