பொது செய்தி

தமிழ்நாடு

"என்டோசல்பான்' தடை செய்யவிவசாய சங்கம் வலியுறுத்தல்

Updated : மே 10, 2011 | Added : மே 10, 2011
Advertisement

மதுரை:"பாதிப்பை ஏற்படுத்தும், "என்டோசல்பானை' தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்,'' என, விவசாய சங்க மாநில செயலர் சண்முகம் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:கேரளாவில் முந்திரி தோட்டத்துக்கு தெளிக்கப்பட்ட, "என்டோசல்பான்' பூச்சி மருந்து, காற்றில் பரவியதால், அருகில் உள்ள கிராமங்களில் பலர் பலியாயினர். நெல், கத்தரி, வெண்டை, மா, துவரை, பருத்தி, முட்டைகோஸ், காபி, தேயிலை போன்றவற்றில், "என்டோசல்பான்' தெளிக்கப்படுகிறது. "என்டோசல்பான்' கலந்த தண்ணீரால், கால்நடைகள், வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன. இதன் பாதிப்பு பல நாட்களுக்கு பின் தான் தெரிய வரும்.நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளில், அதிகளவில், "என்டோசல்பான்' தெளிக்கப்படுகிறது. இதுகுறித்து இந்தியாவில் 17 கமிட்டிகள் அமைத்து, ஆய்வுகள் நடத்தப்பட்டன. "என்டோசல்பானை' தடை செய்ய, கமிட்டிகள் வலியுறுத்தின. அரசு தடை செய்யவில்லை. "என்டோசல்பானால்' ஆண்களுக்கு, ஆண்மை பாதிப்பு, பெண்களுக்கு, கருத்தரித்தலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.உலகில், "என்டோசல்பானை' பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதை எதிர்த்து, விவசாய சங்கம் சார்பில், பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இது குறித்து குழு அமைத்து, நீலகிரிக்கு சென்று விழிப்புணர்வு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.கர்நாடகாவில் இதுவரை, 6,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர் பலி ஏற்படும் முன், "என்டோசல்பானை' தடை செய்ய, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.இவ்வாறு சண்முகம் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X